Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
கடிதங்கள்

நீடூழி வாழ்க!

‘வீடே அலுவலகம் என்ன செய்கிறது தமிழகம்?’ கட்டுரை இன்றைய யதார்த்தத்தின் கண்ணாடி. நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொள்வோம் என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்லப் போகிறோம். இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வோம்.

- E.c.Thavamani joshua Ebi chellappa

‘இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்’ - கட்டுரை நெகிழ்ச்சி. நீளாயுள் நிறைசெல்வத்துடன் நீங்கள் நீடூழி வாழ்க!

- C Vidhya

கடிதங்கள்

‘பொழுதெல்லாம் புத்தகங்கள்’ என்னும் கட்டுரை என்னை மேலும் புத்தகம் படிக்கத் தூண்டுகிறது. இதைப்போன்று நிறைய கட்டுரைகள் வர வேண்டும்.

- சக்திவேல்

அவலம் ஒழிக்க அடியெடுத்த அரசு. மிக முக்கியமான முன்னெடுப்பு. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆனந்த விகடன் குழுமத்திற்கு மிகவும் நன்றி!

- S காந்திமதி

‘கை’ நழுவும் இந்தியா கட்டுரைதான் காங்கிரஸின் தற்போதைய நிலைமை. காங்கிரஸ் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால், சிறு கட்சிகளை பா.ஜ.க விழுங்கிவிடும்.

- தாஸ்

அடுத்த கட்டுரைக்கு