சாதனையாளர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்! இத்தகைய மக்கள் நேயம் சார்ந்த செய்திகளை அதிகம் விகடனில் எதிர் பார்க்கிறோம்.

- V பாலசுப்ரமணியம் vikatan.com

அடிக்கடி கட்சி மாறி சாதனை செய்யும் ராதாரவி அவர்களுக்கு வாழ்த்துகள்! பா.ஜ.க-வில் இணைவதைவிட பா.ஜ.க-வில் நீடிக்க சிறந்த தகுதியும் பொறுமையும் எளிமையும் வேண்டும்.

- ஸ்ரீ vikatan.com

சாமானியர்களின் கதை சொல்லும் ‘கிருஷ்ணாயில் தேடிய கிருஷ்ணா!’ சிறுகதை அருமை. மறந்துபோன கிருஷ்ணாயிலை நினைவுபடுத்தி, நல்ல அனுபவத்தை வாசகர்களிடம் கடத்துகிறது.

- ஆதம்தாஸன் vikatan.com

கடிதங்கள்

இறையுதிர்காடு விறுவிறுவென்று நகர்கிறது. பக்தியாகவும், பயமாகவும் இருக்கிறது.

- SVS மணியன், கோவை

தினேஷ் கார்த்திக் பேட்டி படித்தேன். அவருக்கு கிரிக்கெட்டில் கொஞ்சமேனும் நல்லது நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

- லட்சுமணன், வந்தவாசி

இளைஞர்களைக் கவர்வதற்காக பட்டாஸ் எனத் தலைப்பு வைத்ததாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர். எல்லாவற்றிலுமே சமரசம் என்றால் எப்படி பாஸ்?!

- ஜீவன், புதுக்கோட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு