Published:Updated:

கடிதங்கள்

உடலெங்கும் பரவசம்!

கடிதங்கள்
கடிதங்கள்

எடப்பாடி பழனி சாமியின் பேட்டிகூட எளிமையாக இருக்கிறது.

-SVS மணியன், கோவை

கமல் 60 நிகழ்வுகளின் தொகுப்பு வெகுஜோர். திரையில் ஜொலித்ததுபோல் அரசியலிலும் சொல்லும்படி கமல் நடப்பார் என நம்புகிறோம்.

- அனிதா, சேலையூர்

`அப்பா என்று கூப்பிடுவதற்குள்ளேயே என் பிள்ளை இறந்துவிட்டானே’ என்று, விஷவாயு தாக்கி இறந்த அருள்குமாரின் தாய் கதறி அழுதது இதயத்தை பாரமாக்கியது.

- கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்

கடிதங்கள்

அயோத்தியா கட்டுரை அருமை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை ‘மோடி மேஜிக்’ என விமர்சிப்பவர்களுக்கு, இன்னமும் அங்கே மூடுபனியால் சூழ்ந்துள்ள எதிர்ப்பு மனப்பான்மையின் ‘லாஜிக்’ புரியப்போவதில்லை!

- கருணாகரன், போரூர்

1919-லிருந்து 2019 வரையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் பரிணாம வளர்ச்சியையும், பின்னடைவுகளையும் சொல்லி, கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய அவசியத்தையும் குறிப்பிட்ட கட்டுரை அருமை..!

- மியாவ்சின், கே.கே.நகர்

பாபாயணம் படிக்கும்போது உடலெங்கும் ஒரு பரவசம் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

- ஜெயராமன், கோவிலம்பாக்கம்

27.11.19 ஆனந்த விகடன் இதழில் வெளியான ‘அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு’ கட்டுரையில் டிசம்பர் 6, அம்பேத்கரின் பிறந்தநாள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. நினைவுநாள் என்பதே சரியான தகவல். தவற்றுக்கு வருந்துகிறோம்!