Published:Updated:

சிறந்த பாடம்!

கடுதாசி
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி

கடுதாசி

சிறந்த பாடம்!

கடுதாசி

Published:Updated:
கடுதாசி
பிரீமியம் ஸ்டோரி
கடுதாசி

யற்கை விவசாயத்தில் விளைந்த ‘மா’வின் அட்டைப்படத்தைப் பார்த்தடவுன் பழத்தைச் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. இயற்கையில் விளைந்த மாம்பழங்களுக்கும் ரசாயனத்தில் விளைந்த மாம்பழங்களுக்கும், நிறத்திலும் பள பளப்பிலும் வித்தியாசம் தெரியும்.

-கே.ரவிச்சந்திரன், திருவள்ளூர்.

பஞ்சகவ்யா என்ற அற்புத வளர்ச்சியூக்கியை மக்களுக்கு அளித்த டாக்டர் கே.நடராஜன் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் பஞ்சகவ்யா தயாரிப்பு முறையை ரத்தின சுருக்கமாக விளக்கியிருந்தீர்கள். இதற்குப் பசுமை விகடனுக்குப் பாராட்டுகள். இந்தத் தகவலைத் திருமணங்களில் நினைவுப் பரிசாகக் கொடுக்கப்போகிறோம்.

-அ.சிவகுமார், பரங்கிப்பேட்டை.

ஊருக்கு உதவும் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு வாழ்த்துகள்.

-ஆர்.பரணி, ஆக்கூர்.

விவசாயத்தில் லாபமில்லை என்று முயற்சி செய்யாதவர்கள்தான் சொல்வார்கள். முறையாகத் திட்டமிட்டுச் சாகுபடி செய்தால், லாபம் எடுக்க முடியும் என்பதைப் பசுமை விகடன் இதழில் இடம் பெறும் மகசூல் கட்டுரைகள் நிரூபணம் செய்துவருகின்றன. 30 சென்ட் நிலத்தில் மாதம் 35,000 லாபம் எடுத்துவரும் சுகன்யா-கோபால கிருஷ்ணன் தம்பதிக்கு மேன்மேலும் வளரட்டும்.

-எம்.மீனா, அம்பத்தூர்.

பண்ணைத் தொழில் பகுதியில் வரும் கட்டுரைகள் பயனுள்ளதாக உள்ளன. அதுவும் கலப்பு மீன் குறித்த சின்னசாமியின் அனுபவங்கள் சிறந்த பாடமாக இருந்தது.

-சி.முருகன், மரக்காணம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மண்புழு மன்னாரு’ சொல்வதற்கு முன்பு வரை ‘சுய உதவிக்குழு’வை உருவாக்கியது நம் நாடுதான் என்று நினைத்தோம். வங்கதேசத்தில் உருவான இந்த அற்புத முறை, உலகம் முழுக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. தமிழ்நாட்டில் இதன் வளர்ச்சி வேகமாகத்தான் உள்ளது.

-சி.எம்.சுகதேவ், கடலூர்.

அமெரிக்கன் படைப்புழுக்களை இயற்கை விவசாயத்தால் அழிக்க முடியும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தார், ‘பூச்சி’ செல்வம்.

-எஸ்.ராஜா, வாடிப்பட்டி.

அயன்வடமலாபுரம் ஊர் மக்கள், தங்களின் கோயில் திருவிழாவில் பாரம்பர்ய விதைகள் பாதுகாப்பு, பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி நல்ல உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

-தே.நரசிம்மன், கீழ்க்கோட்டை.

யோகா ஆசிரியை கலைவாணியின் பாரம்பர்ய நெல் சாகுபடியில் முக்கியமான தகவல் ஒன்று இடம்பெற்றிருந்தது. மழை நீரில் நெல் மூழ்கினாலும் முட்டைக் கரைசல் மூலம் காப்பாற்ற முடியும் என்பதுதான் அது.

-மா.ரேவதி, புலியூர்.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு

தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.