இன்னா நாற்பது இனியவை நாற்பது வாராவாரம் அருமையாக உள்ளது. உடலுக்கு டயட் மட்டுமல் லாமல், மனதுக்கான சில டிப்ஸும் டாக்டர் தருவது படிக்கத் தூண்டுகிறது.
- ராபா, காஞ்சி
கே.வி.ஆனந்த் - சூர்யா காம்போ என்பது எனக்கு எப்போதுமே பிடித்த ஒரு காம்போ. காப்பானில் மோகன் லால், பொம்மன் இரானி என்று மல்ட்டி ஸ்டார்கள் வேறு... வெயிட்டிங் ப்ரோ!
- மணிமாறன், இடையன்குடி
`தெறி’ பட டைட்டிலில் ரமணகிரிவாசன் என்ற பெயரைப் பார்த்து, பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்திருக்கிறேன். ஆனந்த விகடன் பேட்டியில் தான் அவர் முகத்தைக் கண்டேன். திறமையாளர்களை, எங்கோ இருக்கும் என்னைப் போன்ற பலருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் என்றென்றும் ஆனந்தவிகடனே நம்பர் 1!
- கிருஷ்ணசாமி, ஓசூர்.
ஜானகி சபேஷ் அவர்க ளின் ஸ்டோரி டெல்லிங் பணிக்குப் பாராட்டுகள். அவர் சொன்ன அந்த நெருப்புக் கோழிக் கதைக்கான விடையை யோசித்துக்கொண்டே இருக்கிறேன்!
- ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.
காஞ்சிபுரம் செல்லாமலே அத்திவரதரை தரிசித்த பாக்கியத்தைக் கொடுத்தது அழகான வண்ணப்படம்.
- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.
ஆர்ட்டிகிள் 15 பற்றிய பார்வை அட்டகாசம். அதற்கான தலைப்பான ‘தேவை கருணை அல்ல; நீதி!’, படத்தின் ஆழத்தை அசலாகக் கண்முன் நிறுத்தியது.
- சந்திரமதி, சென்னை -91
ராட்சசி பற்றிய விரிவான விமர்சனத்துக்கு நன்றி விகடனாரே.
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
நந்தினி, முகிலன் இருவர் பற்றிய கட்டுரைகளும் இரு கோணங்களையும் அலசின. சரியாக, உங்கள் கட்டுரையை நான் படித்துக் கொண்டிருக்கும் போது நந்தினிக்கு எளிமையான முறையில் திருமணம் நடந்ததை இணையம் மூலமாக அறிந்து மனசுக்குள் வாழ்த்தினேன்.
- லட்சுமி சிவகணேசன், தர்மபுரி.