ஆளுங்கட்சி பதவியேற்றதற்குப் பாராட்டித் தலையங்கம் எழுதிய விகடன், இந்த வாரம் எதிர்க்கட்சியும் இயங்க வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தலையங்கமாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த குறள், நச்!

- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

புதிதாய்க் களமிறங்கியிருக்கும் மாணவர் படைக்கு வாழ்த்துகள். விகடன் குழும இதழ்கள் ஒவ்வொன்றும் ஜொலிப்பதற்கு, ஒவ்வொரு வருடமும் இப்படிப் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டு வருவதுதான் என்பதை மறுப்பதற்கில்லை!

- வரதன், திருவாரூர்.

தனுஷை மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு சின்னதாய், சிறப்பாய் தனுஷ் அளித்த பதில்களும், வெகு சுவாரஸ்யம்!

- கோ.குப்புசாமி, சங்கராபுரம்.

வாசகர் மேடைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஓவியம், எந்த பதிலுக்கு என்று தேடிப் பார்ப்பதே செம ஜாலியாக இருக்கிறது!

-பா.சு.மணிவண்ணன், திருப்பூர் - 4.

உலகின் எல்லா இயக்கங்களுக்கும் அன்பே ஆதாரம். அன்பில்லா உயிர் பயனற்றது. அன்பைப் பற்றிய அடிகளாரின் கட்டுரை மிகவும் அற்புதமாக இருக்கிறது.

-பிரேமா குரு, குரோம்பேட்டை.

`கண் காது வாய்’ சிறுகதை படித்தேன். புதிய பாணியில் கதை சொன்ன கதாசிரியர் சந்தோஷ் நாராயணனுக்குப் பாராட்டுகள்.

-பார்த்தசாரதி ராகவன், vikatan.com

ரீமேக் இந்த வாரம் என்ன படம், யாரு எனத் தேடிப் பார்க்க வைக்கிறது!

- எம். செல்லையா, சாத்தூர்.

இசையையும் நடனத்தையும் சிலாகித்து, நாற்பதுக்கு மேல் வாழ்வைக் கொண்டாடத் தெரிந்தால் நோய் எல்லாம் பயம் கொள்ளும் என்று விளக்கிய இந்த வார ‘இன்னா நாற்பது இனியவை நாற்பது...’ தரம்!

- கே.எஸ்.கோவர்த்தனன், ரங்கம்.

இந்த வார ஆன்லைன் ஆஃப்லைன் பகுதியில் டேட்டா ரெகவரி பற்றிய பீதியைக் கிளப்பிவிட்டு, பின் அதிலிருந்து காத்துக்கொள்வது எப்படி என்ற தகவலையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தினீர்கள் ஐயா!

- மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

அழகிரி பேட்டியில் அவரே, ‘கட்சி தோற்கவில்லை; கட்சித் தலைவர்கள்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள்’ என்று சொன்னது நேர்மையானதாக இருந்தது.

- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.