Election bannerElection banner
Published:Updated:

கடிதங்கள் : கொண்டாடலாம்!

மோடி
மோடி

சித்தார்த்தா மரணம் குறித்த கட்டுரையை ஆனந்த விகடன் அணுகி யிருந்த விதமே பாராட்டுக்குரியதாய் இருந்தது.

‘கடந்து போகக் கற்போம்’ என்ற தலைப்பில் அதை வழங்கிய கட்டுரையாளருக்கு நன்றி.

- க.தேவநேசன், திருவள்ளூர்.

`நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்’ கட்டுரை நெகிழச் செய்துவிட்டது. உதவுகிறேன் பேர்வழி என்று விளம்பரம் தேடிக்கொண்டி ருக்கும் பலருக்கு மத்தியில், ‘நாங்க சமம். ஃபிரெண்ட்ஸ்தான்’ என்று முடிவு செய்த முத்தமிழ்ச்செல்வியை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடலாம்!

- ராஜாராம், சேலம்.

ம்பது வருடங்கள் ஓடிக் கொண்டி ருக்கும் க்ரைம் புலி ராஜேஷ்குமாருக்கு வாழ்த்துகள். என் வாசிப்பை ஆரம்பித்துவைத்தவர் அவர்தான். இன்றைக்கும் மனதை உற்சாகப் படுத்துவது அவரது எழுத்துகள்தான். புதிய தகவல்களோடு அமைந்த அவரது பேட்டிக்கு நன்றி!

- வினோத் ராஜன், மணச்சநல்லூர்.

சிறுகதை படித்தேன். குத்தமுள்ள நெஞ்சங்கள் குறுகுறுத்ததை மிக அழகாகக் காட்சிப்படுத்தியமைக்கு ம.காமுத்துரைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

- ஹேமந்த் குமார், www.vikatan.com

`முதல் ரீல் வாய்ப்பை எப்படிப் பாத்தேனோ அப்படித்தான் இன்னைக்கு வரை எல்லாப் படங்களுக்கும் வொர்க் பண்றேன்” என்ற இமானின் வார்த்தைகள் அவரின் வெற்றியின் காரணத்தைச் சொன்னது!

- கே.இந்துக்குமரப்பன், விழுப்புரம்.

கடிதங்கள் : கொண்டாடலாம்!

மோடி அரசு பழைய தவறுகளி லிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிய வில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றே இந்த நடவடிக்கை யிலும் அரசின் நோக்கத்தைக் குறைசொல்ல முடியாது. ஆனால் அவசர கதியில் அதிரடியாகச் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இந்த நடவடிக்கையால் காஷ்மீரிலும் லடாக்கிலும் இனி வளர்ச்சி ஏற்படும் என்று சொல்வது அபத்தத்தின் உச்சம். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பீகார் உட்பட்ட மற்ற மாநிலங்களில் என்ன தேனும் பாலுமா ஓடுகிறது?

- அஜித், www.vikatan.com

டி.ராஜாவின் பேட்டி நேர்த்தியாக இருந்தது. நேரடியான கேள்விகளுக்கு நிருபரும், மழுப்பாமல் பதில் சொன்ன தற்கு டி.ராஜாவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

- கண்மணி ஞானசேகரன், மேல்மருவத்தூர்.

‘க்ளிக் ஸ்டார்ஸ்’ பகுதியில் நான்கு புகைப்படங்களைப் பார்க்கும்போது எதுவும் புரியவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தபோதுதான் புகைப்படக்காரரின் சாமர்த்தியம் தெரிந்தது. விடுதலை மணிக்கு வாழ்த்துகள்!

- கோவை எஸ்.வி.எஸ்.மணியன், டாடாபாத்.

`நீரைக் காப்பதே நீதி’ தலையங்கம் சொன்ன விஷயம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் நிச்சயம் சென்று சேரவேண்டிய ஒன்று!

- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு