Published:Updated:

கடிதங்கள்: அட்டைப்படத்துக்கு அப்ளாஸ்

letters
letters

இந்த வார அட்டைப்படத்தைப் பாராட்டியே தீரவேண்டும்.

தாநாயகர்களை மட்டும் கொண்டாடிக்கொண்டு நாயகபிம்பத்தில் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்க, அவர்களுக்கு இணையாக, அவர்களைவிடத் தீவிரக் கருத்தைத் தங்கள் படத்தில் பேசிக்கொண்டிருக்கும் நாயகிகளை ஒன்றுசேர்த்த ஆனந்தவிகடன் அட்டைப்படத்துக்கு நன்றிகள்!

- அனுராதா, பெங்களூரு.

லையங்கத்தின் உட்கருத்தும் தலைப்பும் சாட்டையடியாக இருந்தது!

- விக்கிரமன், சோழிங்கநல்லூர்.

`சிங்கப்பெண்’ மாரியம்மாள் குறித்த விரிவான அறிமுகத்துக்கு நன்றியும் பாராட்டுகளும். இறுதிச்சுற்றில் அவர் வெல்ல வாசகர்களின் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் நிறைய உண்டு!

-ஜெயசந்திரன், வடவள்ளி.

ந்த வார வாசகர் மேடையின் ஆண் பெண் தலைவர்கள் கலவை செம க்ரியேட்டிவிட்டி! பதில்கள் பவுண்டரி என்றால், அதற்கான படங்கள் சிக்ஸர் அடிக்கின்றன!

- ரவிகுமார் கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரம்.

மாதேவியின் ‘மஞ்சள் நிறத்தாள்’ கதையைப் படித்ததும் எனக்கு என்‌வீட்டு நாய் மணி நினைவுக்கு வருகிறான்... இப்போது ‌‌‌‌அவன் இல்லை.

- விஜயராஜ்.எம், vikatan.com

க்கள் பார்த்து, சிலாகித்த நல்ல படங்களுக்கு விருது கிடைக்காவிட்டால் சர்ச்சை ஏற்படத்தான் செய்யும். கடந்த வருடம் பரியேறும் பெருமாள், மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பும் பெற்றன. அவை ஜூரியால் அங்கீகரிக்கப்படாதது வருத்தத்தைத் தருகிறது. பாரம் சிறந்த படமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு திரை அரங்குகளிலாவது அதை வெளியிட NFDC போன்ற அரசின் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் படங்களையே திரையரங்கில் வெளியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத அமைப்பிடம் இதை எதிர்பார்ப்பது அதிகம்தான். என்றாலும்...

- அஜித், vikatan.com​

கடிதங்கள்: 
அட்டைப்படத்துக்கு  அப்ளாஸ்

ந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரை நிறைய அடிப்படை ஐயங்களைத் தெளிவுபடுத்தியது.​​ மத்திய அரசு நிச்சயம் இந்த நிலையை மாற்ற முயற்சி செய்யும் என்று நம்புவோம்.

​- வேலழகன், பொள்ளாச்சி.

`சமுத்திரக்கனியா... அட்வைஸா கொல்வாரே’ என்று பலர் சொன்னாலும்​, அவர் கேள்வியிலிருக்கும் நியாயம் சிந்திக்க வைக்கிறது. தன் இத்தனை வருட அனுபவத்திலிருந்து அவர் இளைஞர்களுக்கு எதுவும் போதித்தால் அதில் தவறொன்றும் இல்லையே!

- கதிரேசன், மயிலாடுதுறை

அடுத்த கட்டுரைக்கு