Published:Updated:

கடிதங்கள்: விகடனுக்குப் பரிசு!

விகடன் டீம்

தொடர்ந்து நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ள ஆனந்தவிகடனுக்கு, அது வெளிவருகிற நாளில் நான் ஓடிப்போய் வாங்குகிறேன் என்ற பரிசை அளிக்கிறேன்!- மியாவ்சின், கே.கே.நகர்.

letters
letters

தேர்தல் போட்டியைக் கணித்த வாசகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். அதிலும் பலர், பலமுறை பரிசு பெற்றவர்கள் என்பது அவர்களுக்கும் விகடனுக்கும் பெருமைதான். பத்திரிகைகள் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களின் இந்த வெற்றி பறைசாற்றுகிறது.

- சேகர் கருப்பசாமி, உடுமலைப்பேட்டை.

விஜய் சேதுபதியின் பேட்டியில் அதிகமாக போதனைகள்தான் இடம்பெற்றிருந்தது. மனுஷன், ஒன்று ஆசிரமம் ஆரம்பிக்கலாம், அல்லது, அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்!

- அபிநயா, கந்தர்வக்கோட்டை.

கடிதங்கள்: விகடனுக்குப் பரிசு!

‘இன்னா நாற்பது இனியவை நாற்பது’ இந்த வாரம் பேசிய பொருள், பலரும் பேசத்தயங்குகிற ஒன்று. அதைத் தெளிவாகவும், நல்ல உதாரணங்களுடனும் எழுதியிருந்தார் சிவராமன்.

- இந்துக்குமரப்பன், விழுப்புரம்.

சிறப்பாய், சுருக்கமாய் வந்து முடிந்த ‘ஆன்லைன் ஆஃப்லைன்’ மூலம் நாங்கள் கற்றுக்கொண்டதை இனி அடிக்கடி ஆன் செய்வோம்!

- லக்‌ஷணா, திருநெல்வேலி.

கேரள மழைவெள்ளம் குறித்த விரிவான கட்டுரைக்கு நன்றி. நாமும் அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

- செந்தில் குமார், திருத்தணி.

ராணுவத்தால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்னும் நம்பிக்கை இருக்கும்வரை ஹாங் காங் மட்டுமல்ல, எந்தவொரு தேசியச் சிக்கலும் தீரப்போவதில்லை என்பதும் உண்மை. ஒரே சமயத்தில் காஷ்மீரிலும் ஹாங் காங்கிலும் ஒலிக்கும் குரல்கள் உணர்த்தும் செய்தி இதுவே.

- முகமது ரஸ்மி, vikatan.com

வாசகர் மேடையில் சிம்பு - தனுஷ் படத்துக்கு வாசகர்கள் கொடுத்த தலைப்புகள் சிறப்ப்ப்ப்ப்பு!

- கதிஜா ஹனீபா, திருச்சி.

கிரிக்கெட்டில் ‘நம்ம பசங்க’ வெளுத்துக்கட்டட்டும். இதன்மூலம் விளையாட்டும் அவர்கள் வாழ்வும் செழித்தால் மகிழ்ச்சியே!

- முருகபூபதி, திருமங்கலம்.