Published:Updated:

`வைகையில வெள்ளப்பெருக்கு; வறண்டு கிடக்குறது வண்டியூர் தெப்பக்குளம்'- கவலையில் மக்கள்

வைகை ஆற்றில் தொடர்ந்து சில நாள்களாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், ஆற்றுக்கு மிக அருகில் இருக்கும் வண்டியூர் தெப்பக்குளத்துக்கு இன்றளவும் நீர் வந்துசேரவில்லை.

7 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

`வைகையில வெள்ளப்பெருக்கு; வறண்டு கிடக்குறது வண்டியூர் தெப்பக்குளம்'- கவலையில் மக்கள்

இதைத் தொடர்ந்து வைகை நதியில் சில நாள்களாக நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஆற்றில் நீர் ஓடினாலும் வைகையைச் சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்கள் இன்றளவும் வறண்டு காணப்படுகின்றன. மதுரை நகரின் பிரதான நீர்நிலைகளுள் ஒன்று வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம். இது தமிழகத்தின் மிகப்பெரிய கோயில் தெப்பக்குளங்களுள் ஒன்று. 1645-ல் மன்னர் திருமலை நாயக்கரால் இந்தத் தெப்பம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பருவமழை பெய்யும் காலங்களில் எப்போதும் இக்குளம் நீர் நிரம்பிக் காணப்படும். ஆற்றுக்கு மிக அருகில் இருந்தும், இந்தத் தெப்பக்குளத்துக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை.

`வைகையில வெள்ளப்பெருக்கு; வறண்டு கிடக்குறது வண்டியூர் தெப்பக்குளம்'- கவலையில் மக்கள்

பெரும்பாலும் பந்தல்குடி கால்வாய் வழியாகத்தான் வைகையில் இருந்து நீர் வண்டியூர் கண்மாயை வந்தடையும். தற்போது பந்தல்குடி கால்வாய் முழுவதுமாக கழிவு நீர் தேக்கமாக மாறியுள்ளது. நீர் வந்தடைய வேண்டிய பல வரத்துக்கால்வாய்களும் இன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வைகையின் ஆற்றுப் படுகையானது கிளைக் கால்வாய்களின் படுகையைவிட தாழ்வாக இருப்பதும் இதற்கான முக்கிய காரணமாய் உள்ளது. கழிவுகளை நீக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் புத்துயிர் பெறும். இதற்கான நிதி மாநகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு