Published:Updated:

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

கஜா நீ எப்படா வருவ எனக் கலாய்த்த மற்ற மாவட்ட நெட்டிசன்கள் தூங்கப் போக, நவம்பர் மாதம் 15-ம் தேதி  இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கிளம்பிய கஜா டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டது.

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

கஜா நீ எப்படா வருவ எனக் கலாய்த்த மற்ற மாவட்ட நெட்டிசன்கள் தூங்கப் போக, நவம்பர் மாதம் 15-ம் தேதி  இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கிளம்பிய கஜா டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டது.

Published:Updated:
கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

சிலருக்குக்  கடந்த காலம் இறந்த காலமாக படிந்திருக்கிறது. சிலருக்கு வாழ்ந்த காலமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் பாழாய்ப்போன மனசு பல விமோசனங்களுக்குத் தயாராகிறது. உண்மையான அன்புக்கு ஏங்குகிறது. திடீரென நிகழ்கிற சுவாரஸ்யங்களுக்கு காத்திருக்கிறது. ஆனால், நாம் நினைத்ததைப் போல செயல்படக் காலம் ஒன்றும் நமது நிழல் இல்லையே!  2018, வருடம் என்பதைவிட மறக்க முடியாத ஒரு வரலாறு. தனி மனிதரில் ஆரம்பித்து உலக நாடுகள் வரை பல சந்தோஷங்களையும், துயரங்களையும் கொடுத்திருக்கிறது. 2018-ம் ஆண்டு உலகத்துக்கு `பேரழிவுகள் காலம்'. அதில் இந்தியா சில பேரழிவுகளைச்  சந்தித்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் மீள முடியாதவர்களும் குறித்த சிறிய  `பிளாஷ் பேக்'

கேரளா வெள்ளம்

கேரளா தன்னுடைய இறந்தகாலங்களை நினைத்தால் முன்னிலையில் வந்து நிற்கப் போவது 2018 தான். கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்பட்ட கேரளாவை இயற்கை முடிந்த வரை தூக்கிப் பந்தாடிவிட்டுப் போனது. ஆகஸ்ட் 14 அன்று பிற்பகல் வேளையில் கேரளா அதிக பருவ மழையைப் பெற்றது. இதன் விளைவாக அணைகள் கொள்ளளவை எட்டின; முதல் 24 மணி நேர மழையில் மாநிலம் 310 மிமீ மழை பெற்றது. அதிக மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால் கிட்டத்தட்ட எல்லா அணைகளும் திறக்கப்பட்டன. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக, அதன் 42 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டன. அசாதாரணமான மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும். இதில் 373 பேர் இறந்தனர். 314,391 பேர் இடம்பெயர்ந்தனர்.

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

மாநிலம் முழுவதும் 17,000-க்கும் அதிகமான மக்கள் 48 மணி நேரத்துக்குக் குறைவான காலப்பகுதியில் இடம்பெயர்ந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க பல்வேறு இடங்களில் 350 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. 24x7 கட்டுப்பாட்டு அறை அலுவாவில் செயல்பட்டது. ஆகஸ்ட் 12, 2018 வரை மாநிலம் முழுவதும் கடுமையான பருவமழை, நிலச்சரிவு மற்றும் நீர்த்தேக்கங்களை நிரம்பி வழிதல் ஆகிய காரணங்களால் 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36,000 பேர் இடம்பெயர்ந்தனர். கேரளாவின் துயர நிலையை அறிந்த தமிழக மக்கள் போதும் போதும் என்கிற அளவுக்குப் பொருள்களையும், நிதி உதவியையும் அள்ளிக் கொடுத்தார்கள். தமிழக தன்னார்வத் தொண்டர்கள் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு உதவிகளையும் செய்து அவர்களின் துயரைத் துடைத்தார்கள். ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து அந்த மாதத்தின் இறுதிவரை தமிழக வாகனங்கள் நிவாரணப் பொருள்களோடு கேரளாவையே சுற்றி வந்தன. எல்லாம் நல்லபடியாக முடிய கேரள முதல்வர் தமிழக மக்களுக்கு ட்விட்டரில் நன்றி சொன்னது காலா காலத்துக்கும் நிற்கும்.

கஜா புயல்.

இயற்கைக்கும் தமிழகத்துக்கும் ஓர் உடன்பாடு இருக்கும் என்பதுபோல ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் தமிழகத்தை திருப்பிப் போட்டு விட்டுப் போகிற இயற்கை, இந்த வருடம் கை வைத்தது டெல்டா மாவட்டங்களில். வங்கக் கடலில் உருவாகிய புயல் கஜா. இது 2018 வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. கஜா புயல் தாக்கும் எனச் சொல்லப்பட்ட பகுதிகள் முந்தைய நாள் உஷார் படுத்தப்பட்டன. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் கரையைக் கடக்கும் எனச் சொல்லப்பட்டதால் பல மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கஜா நீ எப்படா வருவ எனக் கலாய்த்த மற்ற மாவட்ட நெட்டிசன்கள் தூங்கப் போக, நவம்பர் மாதம் 15-ம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கிளம்பிய கஜா டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துப் போட்டது.

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

நாகப்பட்டினத்தில் தானே கரையைக் கடக்கிறது எனச் சாதாரணமாக இருந்த கொடைக்கானல் மக்களையும் அழவிட்டு வேடிக்கை பார்த்தது கஜா. ``இருள் எல்லோருக்கும் இருளாகவே இருக்கிறது வெளிச்சம்தான் எல்லோருக்கும் வெளிச்சமாக இருப்பதில்லை” என்கிற கவிதை வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்டங்கள் இப்போது வரை இருளிலே இருக்கின்றன. கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் வீடுகள் இடிந்து விழுந்தன. கூரைகள் பிய்த்து எறியப்பட்டன, கால்நடைகள் கொல்லப்பட்டன. எளிய மக்கள் வீடுகளை இழந்து முகாம்களுக்குச் சென்றனர். ஏழைப் பணக்காரர் என்கிற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருடைய தென்னை மரங்களும் உடைந்து வேரோடு விழுந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன. மின்சாரக் கம்பங்கள் சாலைகளிலும் தெருக்களிலும் விழுந்தன. செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டன. புயல் பாதித்த அடுத்த நாள் எல்லாக் கிராமங்களும் வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டன. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் இருந்த செய்தியாளர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார்கள். டெல்டா மாவட்டங்களில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் செய்தி நிறுவனங்கள் பதற ஆரம்பித்தன. கஜாவின் ருத்ர தாண்டவம் புயல் கடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகே வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது.

நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்ட பலர் முதல் நாள் ஒரு வேளை உணவை மட்டுமே உண்டு தங்கி இருந்தனர். உணவு, உடை, இருப்பிடம் என்கிற மூன்று அடிப்படைத் தேவைகளையும் இழந்த பலர் நாளைய பற்றிய நம்பிக்கையை இழந்து  தவித்தனர். தமிழக மக்கள் கஜா பாதித்த மக்களுக்கு உதவ முன்வந்தனர். ஒவ்வொரு ஊரிலும் புயல் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்களில் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பல தன்னார்வ தொண்டர்கள் டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு மக்களுக்குத்  தேவையான உதவிகளைச் செய்தனர். நெடுஞ்சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் முதலில் அப்புறப்படுத்தப்பட்டன. மாநிலத்திலுள்ள மின்சார ஊழியர்கள் எல்லோரும் டெல்டா மாவட்ட பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள வெள்ளத்தின்போது தமிழகம் கைகொடுத்ததை மறக்காத கேரள முதல்வர் முதற்கட்டமாக நிதி உதவியும், மின்கம்பங்களைச் சீரமைக்க  கேரள மின்சார வாரிய ஊழியர்களையும் அனுப்பிவைத்தார். கேரளா வெள்ளம் சந்தித்த பிரச்னை போல டெல்டா மக்களின் பிரச்னை இல்லை. கேரளாவை உடனடியாக மீட்டெடுக்க முடிந்தது. ஆனால், டெல்டா மக்கள் மீண்டுவர குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு மேலாகும். ஆனாலும் ஒட்டு மொத்த தமிழகமும் இப்போதைக்கு மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். விழுந்த தென்னை மரங்களைப் பார்த்து  ``பெத்த புள்ள சோறு போடலானாலும், வச்ச புள்ள சோறு போடும்” எனச் சொல்லி அழுதார்கள். ``இனி நாங்க என்ன செய்யப் போறோம்னு தெரியலையே” என்ற வார்த்தைகள் புயல் கடந்தும் இன்னும் ஒளித்துக்கொண்டிருக்கிறது. கஜா புயலை அரசு பேரழிவாக அறிவிக்கவில்லை. ஆனால், மக்கள் பேரழிவாகத்தான் பார்க்கிறார்கள்.

புழுதிப் புயல். (Dust strome)

கேரளா வெள்ளம் மற்றும் டெல்டா மாவட்ட கஜா புயல் போல பரவலாக அறியப்படாத இன்னொரு புயல் வட இந்தியாவை உருக்குலைந்த புழுதிப் புயல். ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் 2018 மே மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் அதிக திசை வேகம் கொண்ட புழுதிப் புயல் தாக்கியது. இந்தப் புயலில் சிக்கி 125 பேர் இறந்திருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

கஜா, கேரளா வெள்ளம், புழுதிப் புயல்... இந்த ஆண்டு இயற்கை நமக்குச் சொன்னது என்ன?

கண்ணுக்குத் தெரியாத செயற்கை பேரழிவு.

எங்கும் பதியப்படாமல் போன இன்னொரு பேரழிவு ஒன்று தூங்கிக்கொண்டிருக்கிறது. அதன் இழப்புகளும் இறப்புகளையும் இப்போது வரை மனித இனம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட குப்பையில் 79 சதவிகிதக் குப்பைகள் கடலில் கிடக்கின்றன. அவை ஒன்றிணைந்து கடலின் ஐந்து பக்கங்களில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கை உருவாக்கி வைத்திருக்கின்றன. கடலில் கலக்கும் பிளாஸ்டிக்  குப்பைகள் தொடர்ச்சியாகக் கடலில் மிதப்பதால், காற்று மற்றும் அலைகளின் செயல்களால் கலக்கப்பட்டு அவை கடலின் நீரோட்டத்துக்கு ஏற்ப பயணிக்கின்றன. ஆழ்கடலின் கடல் சங்கமிக்கிற இடத்தில் எல்லாக் குப்பைகளும் ஒரே இடத்தை மையமாக வைத்துச் சுழல ஆரம்பிக்கின்றன. அவற்றைவிட்டு பிளாஸ்டிக் பொருள்கள் கடந்துபோக முடியாத அளவுக்கு நீரோட்டம் இருக்கிறது. அப்படி வந்து சேருகிற மொத்தக் குப்பைகளும் ஒரே இடத்தில் மலைபோல தேங்க ஆரம்பிக்கிறது. இப்படித்தான் நடுக்கடலில் குப்பைக் கிடங்கு உருவாக்கியிருக்கிறது. அப்படி மொத்தம் ஐந்து ஆழ்கடல் குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. அவற்றுக்கு கார்பேஜ் பேட்ச் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். உலகில் மொத்தம் வடக்கு பசிபிக் கடல்,  தெற்கு பசிபிக் கடல், தெற்கு அட்லான்டிக் கடல், வடக்கு அட்லான்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய ஐந்து கார்பேஜ் பேட்ச் கிடங்குகள் இருக்கின்றன. இவை மேலோட்டமாகத் தெரிவதில்லை. ஆனால், கடலின் மையப் பகுதியில் மையம் கொண்டிருக்கின்றன. கடலில் இவற்றை மீள் உணவாக உட்கொள்கின்றன. பிளாஸ்டிக் உட்கொண்ட மீன்களைத்தான் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம்.