Published:Updated:

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
தொடங்கியது தென்மேற்கு பருவமழை!
தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்பகுதி வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம கூறியுள்ளது.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பருவமழை விரிவடையக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஜூன் 3ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கக்கூடும் என்று கூறியுள்ளது.

##~~##
அடுத்ததாக ஜூலை மத்தியில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பருவமழை பெய்யக்கூடும் என்றும் இந்த முறை பருவமழைக்காலம் இயல்பாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.