Published:Updated:

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

உலக நாடுகளின் பட்டியலில் வேகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா இருக்கிறது. அதே நாட்டில்தான் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

உலக நாடுகளின் பட்டியலில் வேகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா இருக்கிறது. அதே நாட்டில்தான் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Published:Updated:
1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

வர் பெயர் மகேஷ். பெங்களூரைச் சேர்ந்தவர். உயிர்த் தொழில்நுட்பப் பொறியாளர் படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். தடயவியல் துறையில் தன் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க முயன்றபோதுதான் மகேஷ் சுருள் பாசி குறித்துத் தெரிந்துகொண்டார். தன் ஆய்வுப் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பல தலைப்புகளை அலசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விஷயம் அவர் கண்ணில் பட்டது. ஊட்டச்சத்துக் குறைபாடு. 

ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியைவிட இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகமான குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றனர். உலக வங்கியின் கணக்குப்படி, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் வரிசையில் இருந்துகொண்டேயிருக்கிறது. 

உலக நாடுகளின் பட்டியலில் வேகமான பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா இருக்கிறது. அதே நாட்டில்தான் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாடு எது வளர்ச்சி, என்ன மாதிரியான வளர்ச்சியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் போன்ற சந்தேகங்களைக் கிளப்புகிறது. கடுமையான வறுமை, கல்லாமை, சிறுவயதுத் திருமணம், ஆரோக்கியக் குறைபாடு, சுகாதாரம் போன்றவை குறித்துப் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு குழந்தைகள் பிறப்பதற்கான அடிப்படைக் காரணங்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

2009-ம் ஆண்டின் ஒரு தலைப்புச் செய்தி அவருடைய கண்ணில் பட்டது. அந்தச் செய்தி, "இந்தியாவில் 42 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது இந்த தேசத்திற்கே அவமானம்" என்று கூறியது. இந்தப் பிரச்னை அவரை மிகவும் தொந்தரவு செய்தது. அதன் ஆபத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு போதுமான அளவுக்கு இல்லையென்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்ற மகேஷின் மனம் துடித்தது. 

நுண் ஊட்டப்பொருள்கள் மிகக் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டாலும் அவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்குக் கொடுக்கும் பலன்கள் அபரிமிதமானவை. அதேநேரம் அந்த நுண் ஊட்டப் பொருள்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் ஏற்படும் விளைவுகளும் ஆபத்தானவை. இதைக் கூறுவது உலக சுகாதார மையம். 

ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைய வேண்டுமென்று உணவு ஆராய்ச்சியில் மகேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மைசூரில் அமைந்திருக்கும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆறு மாத காலம் அங்கு அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒன்றைக் கண்டுபிடித்தார். ஒரு கிலோ காய்கறிகளும் பழங்களும் கொடுக்கக்கூடிய ஊட்டங்களை ஒரு கிராம் சுருள் பாசி கொடுத்துவிடும். விண்வெளி ஆய்வு நிலையங்களில் தங்கிப் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்குச் சுருள்பாசிகளைக் கொடுப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அவர்கள் அதை குறைவாகச் சாப்பிட்டாலே அதிக ஆற்றல் கிடைத்துவிடும்.  

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

Photo Courtesy: Durai Nagarajan

குழந்தைகளுக்கு நாள் முழுக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கவேண்டும். அது மிகவும் முக்கியம். அதேசமயம் என்ன மாதிரியான ஊட்டச்சத்துகள் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் இந்தியாவில் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் பெரும்பாலும் இரும்பு, ஐயோடின், வைட்டமின் ஏ போன்ற குறைபாடுகள்தான் அதிகமாக இருக்கின்றது. 

இதைத் தன்னால் முடிந்தவரை சரிசெய்ய வேண்டுமென்று நினைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் தன் வீட்டு முற்றம். அவருக்கு அதற்கான வழிகளும் தெரிந்திருந்தன. ஊட்டச்சத்துகளை எளிதாக வழங்க அவர் தேர்ந்தெடுத்த உணவு சுருள்பாசிகள். அவர், தன் ஆய்வுமுடிவில் சுருள்பாசிகள் விண்வெளி வீரர்களைவிட இந்தியாவில் வாழும் குழந்தைகளுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டார். அந்த நீலம் கலந்த பச்சைப் பாசியை, தானே வளர்க்கவும் முடிவு செய்தார். பல்வேறு ஊட்டங்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு அமைதியாகச் சுருண்டு கிடக்கும் அந்தப் பாசிகளை வளர்க்கத் திட்டமிட்டார் மகேஷ். ஆய்வு முடிந்தவுடன் தன் வீட்டு முற்றத்திலேயே 'ஸ்பைருலினா பவுண்டேஷன்' என்ற பெயரில் அதை வளர்க்கத் தொடங்கினார். 

ஸ்பைருலினா பவுண்டேஷனுடைய நோக்கமும் கவனமும் முழுக்க முழுக்க குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் மட்டுமே இருந்துவருகிறது. நன்னீர் மற்றும் உவர்நீரில் வளரக்கூடிய பாசி வகைதான் இந்தச் சுருள் பாசி. இது ஒற்றை அணு உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஏழு கிராம் வறண்ட சுருள் பாசிப் பொடியில் புரதம், வைட்டமின் பி1, இ2, பி3, இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.  அதோடு பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவையும் மிகச்சிறிய அளவில், அதாவது ஒருவருக்குப் போதுமான அளவில்  அதில் அடங்கியிருக்கும். மற்ற தாவரங்களைப் போலவேதான் இதுவும். இதன் வளர்ச்சியும் சூரிய ஒளியைச் சார்ந்து நடக்கும் ஒளிச்சேர்க்கையின் மூலமாகத்தான் நடைபெறுகிறது. இதை வளர்ப்பதற்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லிகளும் உரங்களும் தேவையில்லை. இதை இயற்கையாகவே வளர்க்கலாம். "மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு ஒரு கிராம் சுருள்பாசி என்ற விகிதத்தில் சாப்பிட்டாலே போதும். ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து தப்பித்துவிடலாம்" என்று உறுதியாகக் கூறுகிறார் மகேஷ். அவர் தற்போது ஆண்டுக்கு ஒன்றரை டன் சுருள் பாசிகளை உற்பத்தி செய்கிறார். 

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

அந்தப் பாசிகளில் தயாரிக்கப்படும் பொடிகளைச் சிறிய கேப்சூல்களில் மாத்திரைகளாக மாற்றி, ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு பிறக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இதை இலவசமாகக் கொடுக்கிறார். அதுவே மற்றவர்களுக்கு 120 மாத்திரைகளை 300 ரூபாய் என்ற விலைக்குக் கொடுக்கிறார். 

இதுதவிர இந்தப் பாசிகள் ரத்த சோகை, நீரிழிவு, கொழுப்பு, ரத்தக் கொதிப்பு போன்றவற்றுக்கும் நல்ல மருந்தாகச் செயல்படுகிறது. இயற்கையான, ஆரோக்கியமான, விலை குறைவான உணவாக இது பார்க்கப்படுகிறது. ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் இத்தகைய குழந்தைகளுக்கு மூன்று மாதத் திட்டத்தில் இதைத் தொடர்ச்சியாக இதைக் கொடுக்கின்றார். இதை அமல்படுத்திய, முதல் இல்லத்தில் வாழ்ந்த குழந்தைகளுடைய செந்நிற ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அவர்கள் ஆரோக்கியமாகத் திகழ்ந்தார்கள். இப்படியாகத் தற்போது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒவ்வோர் ஆதரவற்றோர் இல்லமாக ஒவ்வொரு கிராமமாக அவர் இதைக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார். மகேஷும் அவருடைய குழுவினரும் தங்கள் உற்பத்தியில் விற்பனை செய்யப்படும் பாசிகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை இதற்குச் செலவழிக்கின்றனர். 

1.5 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றும் சுருள் பாசி.. கர்நாடக இளைஞரின் அசத்தல் முயற்சி!

அவர் இந்த முயற்சியைத் தொடங்கிய ஓராண்டில் கர்நாடக மாநிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இவருடைய செயற்பாட்டை அங்கீகரித்தது. தும்குர், ஹஸன், ரைச்சூர் என்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த முயற்சியை விரிவாகச் செய்துகொண்டிருக்கிறார். அவர் தற்போது அரசின் உதவியோடு வீடு வீடாக, ஒவ்வோர் அங்கன்வாடியாக, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று சுருள் பாசிகளை விநியோகித்துக் கொண்டிருக்கிறார். தொடக்க ஆண்டிலேயே 800 குழந்தைகளிடம் இதற்கான பலன்கள் தெரிந்தன. அவருடைய வெற்றிக்குப் பிறகு அவரோடு சேர்ந்து இருபது நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் நிதியுதவி செய்து இதுகுறித்த விழிப்புஉணர்வையும் கொண்டுசெல்ல உதவுகிறார்கள். இதுவரை மகேஷ் சுமார் அறுபது லட்சம் சுருள் பாசி மாத்திரைகளை நகரங்கள் மற்றும் கிராமங்கள் சேர்த்து, சுமார் 250 பகுதிகளில் விநியோகித்திருக்கிறார். அவருடைய முயற்சி கர்நாடக கிராமங்களில் 2010-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை சுமார் 1.5 லட்சம் குழந்தைகளுக்கும் 20,000 கர்ப்பிணிப் பெண்களுக்கும் உதவிக் கொண்டிருக்கிறது. 

இவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவை மக்களுக்குக் கொடுக்காமல் விண்வெளி வீரர்களுக்காக மட்டும் சுமந்து சென்றது அரசாங்கம். அதையே எளிய மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தார் மகேஷ். அறிவியலும் ஆய்வுகளும் மக்களுக்குப் பயன்படுவதாக இருக்கவேண்டும். அதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் உயிர்த் தொழில்நுட்ப ஆய்வாளர் மகேஷ்.