Published:Updated:

₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை! #VikatanInfographics

₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை! #VikatanInfographics
₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை! #VikatanInfographics

மெட்ரோ தண்ணீருக்காக முன்பதிவு செய்தாலும் வருவதற்குப் பதினைந்து நாள்களுக்கும் மேல் ஆகிறது எனப் பலர் தனியார் தண்ணீர் லாரிகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்கின்றனர்.

சென்னையிலிருந்த ஏரி, குளங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புகளாக மாறியதாலும், நிலத்தடி நீர் மட்டங்கள் குறைந்ததாலும், அதிகளவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மெட்ரோ குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீருக்காக முன்பதிவு செய்தாலும் வருவதற்கு பதினைந்து நாள்களுக்கும் மேலாகிறது. எனவே, மெட்ரோ குடிநீருக்காக நாள் கணக்கில் காத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு அடுத்த முடிவு தனியார் லாரிகள்தான். எனவே, பெரும்பாலான குடும்பங்கள் தனியார் தண்ணீர் லாரிகளை முன்பதிவு செய்து தண்ணீரைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் லாரிகளின் விலையும் 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதிக விலை என்றாலும், இதையும் விட்டால் தண்ணீரே கிடைக்காமல் போய்விடும் என அதிக கட்டணம் கொடுத்து மக்கள் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 

₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை! #VikatanInfographics

சென்னை மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகளவில் குறைந்துள்ளதால், மாநிலம் முழுவதுமே தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகதூரம் சென்றும், ஆறுகளிலும், குளங்களிலும் சுனை போன்று உருவாக்கி அதில் வரும் தண்ணீரை அத்தியாவசியத் தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தண்ணீரானது தங்கத்தை விட உயர்ந்த பொருளாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நீர்வளங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பஞ்சத்தினால், தற்போது இருக்கும் விலையைவிட விரைவில் சாதாரண குடிநீரின் விலையும் பன்மடங்கு அதிகரிக்கலாம். இந்தியாவில் சந்தைகளில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் பாட்டிலானது சுமார் 27.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலையைப் பார்த்தால் அதிகபட்சமாக நார்வே நாட்டில் 168.82 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவில் 122.05 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் 36.52 ரூபாய்க்கும், பாகிஸ்தானில் 25.61 ரூபாய்க்கும், நேபாளத்தில் 22.50 ரூபாய்க்கும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் விற்கப்படும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலைப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

₹168 முதல் ₹ 65 லட்சம் வரை... நம்புங்க, இதெல்லாம் தண்ணீர் பாட்டில்களின் விலை! #VikatanInfographics

தற்போதைய தேவைக்கு மட்டும் ஏதாவது ஒருவழியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்திவருகிறோம். ஆனால் வருங்கால நீர்த்தேவைகளுக்கு நம்மிடம் என்ன வழி இருக்கிறது, நிகழ்கால நீர்ப்பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை எடுத்துவருகிறோம், இயற்கை வழங்கிய நீர் ஆதாரங்களை நாம் எப்படிப் பாதுகாத்து வருகிறோம் என்று சிந்திக்கவேண்டும். தொடர்ந்து தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றிக் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகப் பேசிவருகிறோம். ஆனால், அதற்கான ஒரு நிலையான தீர்வை அரசாங்கமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பொதுமக்களும் அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை. 

கடந்த 2017-ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த தி பிவர்லி ஹில்ஸ் ட்ரிங்க் (The Beverly Hills Drink) என்ற நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 (Beverly Hills 9OH2O) என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்வதாகச் செய்திகள் வெளியாகின. அந்தத் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சமாக இருந்தது. இந்தத் தண்ணீர்தான் உலகின் சுத்தமான தண்ணீராகக் கூறப்பட்டது. (இந்த பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது).

இனிவரும் காலங்களில் நாம் அல்லது நம் அடுத்த தலைமுறையினர் சாதாரண பயன்பாட்டுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு