Published:Updated:

`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்

`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்
`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்

``எல்லா ஊர்லயும் தண்ணீர்ப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனா, எங்கள் ஊரோட நிலைமை ரொம்பவே பரிதாபம். ஆமாம். வெளியூர்க்காரவங்க, எங்க ஊர் பெயரைக் கேட்டாலே போதும், அந்த ஊரா அது, தண்ணி இல்லாத காடு ஆச்சே, அங்க யாரு பொண்ணு கொடுப்பாங்க என்றுதான் மொதல்ல சொல்லுவாங்க."

குடிநீர் கிடைக்காது என்ற காரணத்தைக் காட்டி இந்தக் கிராம இளைஞர்களுக்குப் பெண் கொடுக்க, மற்ற ஊர் பெற்றோர்கள் பலரும் மறுத்துவருகின்றனர். இதனால், இங்குள்ள இளைஞர்கள் பலரும் திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் தனிமரமாக வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே இருக்கிறது தென்னமாரி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரையிலும் தண்ணீர் எடுக்க பக்கத்து ஊருக்குப் படையெடுக்கின்றனர். சைக்கிள், டூவிலர் என வாகனங்களில் காலிக்குடங்களைக் கட்டிக்கொண்டு சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள ஆய்க்குடி கிராமத்திற்குச் செல்கின்றனர். அங்குள்ள குடிநீர்க் குழாய்களில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு ஊருக்குத் திரும்புகின்றனர். இப்படி தினம், தினம் குடிநீருக்காகப் பெரும் யுத்தமே நடத்தி வருகின்றனர்.

`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்

தென்னமாரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அரவிந்திடம் பேசினோம், ``எங்க ஊர்ல கடந்த நாலஞ்சு வருஷமா தண்ணீர்ப் பிரச்னை இருக்கு. 7 வருஷத்துக்கு முன்னால, தாய்த் திட்டத்தில் குடிநீர் மேல் தேக்கத்தொட்டி கட்டுனாங்க. ஆறு மாசம் அதிலிருந்து எங்களுக்குத் தண்ணீர் கிடைச்சிச்சி. தண்ணீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதுக்கப்பறம் பைப் லைன் சேதமடைஞ்சு போன்ற பல காரணத்தைச் சொல்லி அந்தத் தண்ணீர் கிடைக்காமல் செஞ்சிட்டாங்க. இப்போ குடி தண்ணீர் எடுக்க 3 கி.மீ பாதயாத்திரை போக வேண்டியதாக இருக்கு. டூவிலர் வச்சிருக்கவங்க, டூவிலரில் போய் தினமும் குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்துருவாங்க. ஆனால், வீட்டில் ஆம்பள இல்லாத பெண்கள் எப்படிப் போய் தண்ணீர் எடுக்க முடியும்?

பக்கத்தில் இருந்த குளத்தைத்தான் முன்னாடி ரொம்ப வருஷமாகக் குடிநீராகப் பயன்படுத்திக்கிட்டு இருந்தோம். வறட்சியால், அதுவும் குறைஞ்சு போச்சு. கலங்கி ரொம்ப மோசமாக கெடக்குது. 3 கி.மீ., நடந்து சென்று தண்ணீர் எடுத்துவர முடியாத பெண்கள் இந்தத் தண்ணீரைத்தான் வீட்டில் குடிநீராகப் பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க. அதிகாரிகள்கிட்ட எத்தனையோ மனு கொடுத்துட்டோம். எங்களுக்குக் குடி தண்ணீர் கிடைக்கிறதுக்கான வழியை அவங்கள் கடைசிவரை ஏற்படுத்தித் தரலை. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வருகிறதோடு சரி. அதுக்கப்பறம் எட்டிக்கூடப் பார்க்க மாட்றாங்க" என்று கோபத்தில் வெடிக்கிறார்.

`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்

``எல்லா ஊர்லயும் தண்ணீர்ப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. ஆனா, எங்கள் ஊரோட நிலைமை ரொம்பவே பரிதாபம். ஆமாம். வெளியூர்க்காரவங்க, எங்க ஊர் பெயரைக் கேட்டாலே போதும், அந்த ஊரா அது, தண்ணி இல்லாத காடு ஆச்சே, அங்க யாரு பொண்ணு கொடுப்பாங்க என்றுதான் மொதல்ல சொல்லுவாங்க. எங்க ஊர் ஆண்கள் பலருக்கும் 35 வயசுக்கு மேல ஆகியும் இன்னும் திருமணம் நடக்கலை. திருமண வயதைக் கடந்தும் பெண்கள் சிலருக்கும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. எங்க ஊரில் தண்ணீர் கிடைக்காது என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம். ஏன், இன்ஜினீயர், பட்டதாரியாக இருந்தாலும், பொண்ணு கிடைப்பது என்பது கஷ்டம்தான்" என்று கூறும் அரவிந்த் ``எனக்கே திருமண வயசு நெருங்கிருச்சு பெண் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்" என்கிறார்.

`கல்யாணத்துக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது!' தண்ணீர்ப் பிரச்னையால் பரிதவிக்கும் தென்னமாரி கிராமம்

மேலும் "எங்கள் ஊருக்குத் தண்ணீர் கிடைக்கிற வழியை அரசு ஏற்படுத்திக் கொடுக்கணும். அப்பத்தான் எங்களுடைய சாபம் தீரும். தொடரும் தண்ணீர்ப் பஞ்சத்தால், ஊரைக் காலிசெய்து நாடோடி வாழ்க்கைக்குச் செல்ல சிலர் தயாராக இருக்கின்றனர். இன்னும் தொடர்ந்து இந்த நிலை நீடித்தால், தென்னமாரி கிராமமே ஊரைவிட்டு காலி செய்யும் நிலை ஏற்படும்" என்கிறார் வேதனையுடன்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு