Published:Updated:

இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!

இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!
இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!

ஆஸ்திரேலியாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபார் க்ளைமேட் ரிஸ்டோரேஷன்' (Breakthrough National Centre for Climate Restoration) என்ற சுயாதீன பருவநிலை மீட்டுருவாக்க அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித இனத்துக்கு 31 ஆண்டுகளே எஞ்சியுள்ளன என்ற அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2050-ம் ஆண்டில் 90 சதவிகித மக்கள்தொகை அழிந்துவிடும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.

நிலம், இனம், மொழி என இயற்கை தந்த பிரிவுகளுக்கும், சாதி, மதம், நாடு என மனிதனே உருவாக்கிக்கொண்ட பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டு, உலகின் மொத்த மனித இனத்துக்கும் பொதுவான அடையாளமாகவும் உணர்வாகவும் இருப்பவை, அனேகமாகத் தாகமும் பசியும்தான். தண்ணீர், உணவு இரண்டின் இருப்பும் அத்தனை இன்றியமையாதது.

இப்படிப்பட்ட முகாமைத்துவம் கொண்ட தண்ணீர் இன்மை, சென்னை, தமிழகம் என்பதைக் கடந்து, ஓர் உலகப் பிரச்னையாகவே மாறிவிட்டது.

இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!

தண்ணீர் பஞ்சம் என்றாலே, உடனே நம் நினைவுக்கு வருபவை மத்திய ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள்தாம். ஆனால், இன்றைய நிலை அதைவிட மோசமாகிவிட்டது. தண்ணீர் இல்லாத, ஒரு பேரழிவை நோக்கி புவி விரைந்துகொண்டிருக்கிறது. ஆம், மனித இனம் தனக்கான கடைசி சில ஆண்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இதுவரை நாம் கேள்விப்பட்ட உயிரின அழிப்புகளுக்குக் காரணமான விண்கற்களோ, கடற்கோள்களோ, இயற்கைச் சீற்றங்களோ இந்த இன அழிப்புக்குக் காரணமாக இருக்கப்போவதில்லை. ஆனால், இம்முறை மனிதனின் அழிவுக்குக் காரணமாக மனிதனே இருக்கப்போகிறான்.

ஆஸ்திரேலியாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபார் க்ளைமேட் ரிஸ்டோரேஷன்' (Breakthrough National Centre for Climate Restoration) என்ற சுயாதீன பருவநிலை மீட்டுருவாக்க அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித இனத்துக்கு 31 ஆண்டுகளே எஞ்சியுள்ளன என்ற அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2050-ம் ஆண்டில் 90 சதவிகித மக்கள்தொகை அழிந்துவிடும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும், இந்தச் சிக்கலின் தீவிரம் அறிந்தும், இதுகுறித்த விழிப்புணர்வை ஐக்கிய நாடுகள் மன்றம் வேண்டுமென்றே ஏற்படுத்த மறுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!

நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதும், புவியின் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்துள்ளதும் இதற்கான முக்கியக் காரணிகளாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, சூரிய ஒளியைத் தாங்கி மீண்டும் வளி மண்டலத்துக்கே பிரதிபலிக்கும் வடதுருவத்தின் ஆர்ட்டிக் படுக்கையில் அமைந்திருக்கும் பனித்திரைகள், ஏற்கெனவே மிக வேகமாக உருகி, கரைந்துவருகின்றன, எனக் கூறியுள்ள அந்த அறிக்கை, அதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, புவியின் தட்பவெப்பநிலை ஒவ்வொர் ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டு தொடாத ஒரு புதிய உச்சத்தைத் தொடும் எனக் கூறுகிறது, அந்த மையம்.

இந்தச் சூழலியல், மாற்றத்தின் முதல் நிலை தாக்கம் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்மீது வெளிப்படும் என்றும் அங்குள்ள 1,000 கோடி மக்கள், தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு நிரந்தரமாகப் புலம்பெயர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த அறிக்கையின் மற்றொரு திடுக்கிடும் அம்சமாகப் பார்க்கப்படுவது, இதனால் அழியப்போகும் நிலங்கள்தாம். வெப்பநிலை உயர்வும் அதனால் நேரும் கடல் நீர்மட்ட உயர்வும், நேரடியாக ஆசியாவின் வங்கதேசத்தையும், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவையும் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல், தண்ணீர் பஞ்சத்தினால் ஷாங்காய், மும்பை, லாகோஸ் போன்ற சர்வதேச நகரங்களின் மக்கள் எல்லோரும் 'பருவமாற்ற அகதிகள்' என்ற நிலைக்கு மாறிவிடுவார்கள் என்றும் ஒரு பயமுறுத்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நகரங்களெல்லாம் 2050-ல் அழிந்துவிடுமாம்... காரணம் இதுதான்!

இறுதியில்,  உலகம் முழுவதையும் தொடர்ந்து 20 நாள்களுக்கு வெப்ப அலைகள் சூழ்ந்துகொள்ளும். இந்த அலைகளுக்கு 80 முதல் 90 சதவிகித மக்கள் பலியாவார்கள் என்றும் அந்த அறிக்கை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தகவலையும் கூறியுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள இந்த சுயாதீன சூழலியல் மையம், இதற்கான தீர்வாக, புவியைக் காக்க மனிதனின் விரைவான எதிர்வினை ஒன்றை மட்டுமே முன்மொழிந்துள்ளது. இது புவி வெப்பமாதல் குறித்து தீவிரமாக ஆலோசிக்கவேண்டிய காலகட்டம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு