Published:Updated:

நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன..! - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai

நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன..! - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai
நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன..! - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai

2020-ம் ஆண்டுக்குள், சென்னையின் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்று கடந்த ஆண்டே வெளியான நிதி ஆயோக் ஆய்வறிக்கை எச்சரித்தது. பருவ மழையும் சரியாகப் பெய்யாமல்போகவே, தண்ணீர்ப் பஞ்சம் விரைவாக ஏற்படலாம் என்று சில மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர செய்யப்படாததால், தற்போது சென்னையில் இயங்கிவரும் ஃபியட், டி.சி.எஸ், விப்ரோ, காக்னிஸன்ட் ஆகிய நிறுவனங்கள், உணவகம் மற்றும் ஓய்வறைகளில் தண்ணீர் விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளன. 

நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன..! - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai

பல உணவகங்களில், சாப்பிட்ட தட்டுகளைக் கழுவ தண்ணீர் போதாமல் போனதால், பாக்குமரத் தட்டு, வாழை இலை என்று பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சி.டி.எஸ் நிறுவனம், தனது வளாகத்துக்குள் செயல்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவைத்துள்ளது. 

நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன..! - உச்சக்கட்டத்தில் தண்ணீர் பிரச்னை #Chennai

சென்னையின் தண்ணீர் விநியோகத்தில் மிகவும் முக்கியமானவையாக இருந்த நான்கு ஏரிகளும் வறண்டுவிட்டன. சோழவரம், போரூர், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகள் கடந்த ஆண்டின்போது இதே நேரத்திலிருந்த தண்ணீரின் அளவில், நூற்றில் ஒரு பங்கு அளவுதான் தற்போது இருக்கிறது. ஏரிகளின் தற்போதைய அளவு, அவற்றின் மொத்த கொள்ளளவில் 0.2 சதவிகிதம் மட்டும்தான். பருவ மழையை மட்டுமே சார்ந்திருக்கும் சென்னையில், போதுமான மழை பெய்யாத காரணத்தால் மட்டுமின்றி, பெய்த மழைநீரை சேமித்துவைக்கும் நீர்நிலைகளைச் சரியாகப் பராமரிக்காததும் ஆக்கிரமித்ததுமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Vikatan