Published:Updated:

35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்
35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்
35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

பேராவூரணியில் உள்ள பெரியகுளம் ஏரியைத் தூர் வார  வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர், அப்பகுதி மக்கள். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என உணர்ந்த அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் ஏரியைத் தூர் வாரும் முயற்சியில் இறங்கியிருப்பதோடு, அதற்கான முதற்கட்ட பணியைத் தொடங்கியுள்ளனர். இதனை சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

பேராவூரணியில் உள்ளது பெரியகுளம் ஏரி. இந்த ஏரி, தொடக்கத்தில் சுமார்  564 ஏக்கர் பரப்பளவுடன் தண்ணீர் வந்து செல்வதற்காக 9 மடைகள் கொண்டு கடல்போல் இருந்துள்ளது. மேலும், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகப் பெரிய நீர் ஆதாரமாகவும் இருந்துள்ளது. தற்போது தூர் வாரப்படாமலும், கடைமடைப் பகுதிக்கு காவிரி நீர் வராததாலும்  வறண்டுபோய் பாலைவனமாகக் காட்சியளிக்கிறது. மேலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும், ஏரிப் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாலும் ஏரியின் பரப்பு சுருங்கி, 369 ஏக்கரில் மட்டுமே உள்ளது. மேலும், நகரில் உள்ள குப்பைகள், கழிவுகள் எனப் பலவற்றைக் கொட்டியதால் ஏரிக்கு வரும் நீர்ப் பாதைகள் அடைக்கப்பட்டுக்கிடக்கிறது.

35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

இந்த நிலையில், பெரிய குளம் ஏரியைத் தூர் வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லாமல்போனது. இதனையடுத்து, பெரியகுளம் ஏரியை  நாமே தூர் வார வேண்டும், அதுமட்டும் இல்லாமல் மற்ற நீர்நிலைகளையும் தூர் வார வெண்டும் என முடிவுசெய்து, இதற்காகக் 'கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர்.மேலும், துர் வாரும் பணியைத் தொடங்குவதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இன்று முதற்கட்டமாக, ஏரியின் கரைகளைப் பலப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

இதுகுறித்து நவீன் என்பவரிடம் பேசினோம், ''பெரியகுளம் ஏரியை நம்பி அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளன. அதோடு, கால்நடைகள் தாகம் தீர்க்கவும், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருந்ததற்கும் இந்த ஏரிதான் முக்கியக் காரணம். தற்போது, தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர்ப் பிரச்னை இருந்துவருகிறது. இதற்குக் காரணம், நீர் நிலைகளைக் காக்க அரசு தவறியதுதான். காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் கடைமடைக்குத் தண்ணீர் வரும், நீர்நிலைகள் நிரம்பும். அதன்பிறகே, எங்கள் பகுதி செழிப்பாக மாறும். ஆனால், பெரிய குளம் போல் பல நீர்நிலைகள் தூர் வாரப்படாமல் உள்ளன. பெரிய குளம் தூர் வாரப்பட்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன.  200 அடியில் இருந்த நிலத்தடி நீர், 400 அடிக்குச் சென்றுவிட்டது. இதை எல்லாம் கவனத்தில்கொண்டு, ஏரியைத் தூர்வாரச் சொல்லி பல வருடங்களாக அரசுக்கு மனு கொடுத்தோம். குடிமராமத்துப் பணிகள் நடக்கும் போது எங்க ஏரியின் பணிகளும் நடக்கும் எனக் காத்திருந்தோம். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அப்போதுதான், இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை எனத் தோன்றியது. தற்போது நாங்களே எரியைத் தூர் வாருவதற்கான நடவடிக்கையில் இறங்கிவிட்டோம்.

35 வருஷமா அரசை நம்பி பயன் இல்லை - ஏரியைக் காக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்

இதற்காக, எங்க பகுதியைச் சேர்ந்த பலர் நன்கொடை தருகிறார்கள். முதற்கட்டமாக, எரியின் கரைகளை ஜேசிபி இயந்திரம் மற்றும் 3 டிராக்டர்களைப் பயன்படுத்தி மண் எடுத்து, கரைகளைப் பலப்படுத்தும் பணியைச் செய்துவருகிறோம். இதற்கு, பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பைத் தருகிறார்கள். ஆனால் ஒரு சிலர், ஏரியில் வரும் மண்ணில் காசு பார்க்க வேண்டும் என்பதற்காகத் தூர் வாருவதற்கு தடை போடுகிறார்கள். அதனால்தான், முதலில் ஏரியைச் சுத்தப்படுத்திவிட்டு கரைகளைப் பலப்படுத்தி வருகிறோம். அரசு செய்யும் என்று எதிர்பார்த்தோம் செய்யவில்லை. இப்போது நாங்களே செய்கிறோம். அதற்கு அரசு அதிகாரிகள் எந்த முட்டுக்கட்டையும் போடாமல் ஒத்துழைப்பு கொடுத்தால் சீக்கிரமே பணியை முடித்துவிடுவோம். மேலும், எங்க பகுதியைச் சுற்றி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. அவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக  தூர்வார இருக்கிறோம். இதுபோன்று நீர் நிலைகளைப் பராமரித்தால், தஞ்சையில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. அமெரிக்காவில் பணியாற்றும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் இதற்காக நன்கொடை கொடுத்து ஊக்கப்படுத்திவருகிறார்கள்'' என்றார்.