Published:Updated:

தமிழகத்தைக் குளிர வைக்கிறது கோடை மழை!

தமிழகத்தைக் குளிர வைக்கிறது கோடை மழை!

சென்னை, ஏப்.21,2011

வெயில் வாட்டத் தொடங்கிய நிலையில், தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை, தமிழகத்தை குளிர வைத்துள்ளது. ##~~##

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "கன்னியாகுமரி கடல் பகுதியில் வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடலோர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் உள் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யலாம். கோடை காலத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யும்.

எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த ஒன்றை மரம் பரந்த சமவெளி பகுதி ஆகியவற்றில் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும்," என்றார் ரமணன்.

அடுத்த கட்டுரைக்கு