Published:Updated:

'தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்'

சென்னை, செப்.21,2011

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ##~~##

ஆந்திர கடற்கரையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது, வட தமிழ்நாடு கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.

இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் அதிகபட்சமாக 7 சென்டி மீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவானது.

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு