Published:Updated:

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

விகடன் விமர்சனக்குழு
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

சென்னை, அக்.29,2011

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சனிக்கிழமை கூறுகையில், "இலங்கை முதல் ஆந்திராவையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடித்துள்ளது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும். சில நேரங்களில் மிக கனத்த மழை பெய்யக்கூடும்.

இதேபோல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அவ்வபோது கனமழை பெய்யும்," என்றார் ரமணன்.

சென்னையில் பலத்த மழை...

இந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கனமழை கொட்டத் தொடங்கியது. இதனால், நகரில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.