Published:Updated:

பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Vikatan Correspondent
பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் குறைந்த பட்ச காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.

இதனால், தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஞாயிறுக்கிழமை தொடங்கி மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் மாதம் இறுதி வரை உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்றிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதையடுத்து, நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மழை விட்டிருந்தது.