Published:Updated:

பருவமழை குறைவால் வறட்சி: பிரதமர் கவலை!

Vikatan Correspondent
பருவமழை குறைவால் வறட்சி: பிரதமர் கவலை!
பருவமழை குறைவால் வறட்சி: பிரதமர் கவலை!
பருவமழை குறைவால் வறட்சி: பிரதமர் கவலை!

புதுடெல்லி: பருவமழை பொய்த்துள்ளதன் விளைவாக, நாட்டின் பலபகுதிகள் வறட்சியின்  பிடியில் சிக்கியுள்ளது தனக்கு வருத்தமளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்  கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, ஜூன் முதல்  தேதியிலிருந்து ஜூலை 15 ம் தேதி வரையிலான காலகட்டடத்தில், பருவமழையின்  அளவு 22  சதவீதம் குறைந்துள்ளது.

நாட்டின் வடமேற்கு பகுதியில் 42 சதவீதமும், மேற்கு மற்றும் மத்திய பகுதியில் 23  சதவீதமும், தென்பகுதியில் 22 சதவீதமும், கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 7  சதவீதமும் மழை குறைவாக பெய்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, நாட்டில் 22  சதவீத மழை குறைவாக பெய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருவமழை பொய்த்துள்ளதன் விளைவாக, நாட்டின் பலபகுதிகள்  வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்  சிங்,நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் உள்ளிட்ட நாட்டு மக்களின்  குறைகளை விரைவில் தீர்க்குமாறு, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.