வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் நாம் முதலில் பெண்ணை குடும்பத்தினருடன் சென்று நேரில் பார்க்கிறோம். பெண் அழகாக பளீர் நிறத்தில், ஒரு ரகசியப் புன்னகையுடன் தனது அகல விழிகளால் ஆழமாகப் பார்க்கும்போது, எந்த ஒரு ஆணுக்கும், ‘இவதான்டா என் மனைவி' என்று தோன்றத்தான் செய்யும். அதேபோல ஆண் ஜிம் பாடியுடன் அஜித்துக்கு இரண்டுவிட்ட தம்பி போலவே தோற்றமளிக்கும்போது பெண்ணுக்கு, `ஐ மெட் மை லைஃப்' என்று பாடத்தான் தோன்றும்.

ஆனால், தோற்றம் ஓகே என்றவுடன் உடனே தலையை ஆட்டிவிடக் கூடாது. நாம் பார்க்கும் ஆண் அல்லது பெண்ணை நான்கைந்து முறை தனியாக சந்தித்துப் பேசி, அவர்களுடைய குணங்களை ஓரளவு கணித்த பிறகே சம்மதத்தைச் சொல்ல வேண்டும். நாம் எல்லோருமே இந்த சந்திப்புகள் மணிரத்னம் பட ஹீரோ - ஹீரோயின் சந்திப்புபோல் க்யூட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆகாஷ் என்ற மாப்பிள்ளைப் பையன் பூஜா என்ற பெண்ணை குடும்பத்தினருடன் சென்று பார்க்கிறான். இருவருக்கும் பிடித்துப்போய், முதல் பார்வையிலேயே இருபது பேர் கும்பலுக்கு நடுவே கமுக்கமாக தங்கள் மனத்தை இடம் மாற்றிவிட்டார்கள்.

மறுநாள் காபி ஷாப்பில் சந்திக்கிறார்கள். பூஜா கப்புஸினோவை ஒரு சிப் குடித்தபிறகு அவள் உதட்டில் ஒட்டியிருக்கும் கப்புஸினோவை வழித்தெடுத்தால், அது இன்னொரு புது ஃப்ளேவர் காபியாக இருக்கும் என்று ஆகாஷுக்குத் தோன்றியது. அவள் உதடுகளுக்கு மேல் கடல் அலை விளிம்பு போல ஒட்டியிருந்த காபி நுரையை ஆகாஷ் குறுகுறுவென்று பார்க்க… பூஜா, “தப்பு…. ரொம்ப தப்பு” என்றாள்

“என்ன தப்பு?”

“இப்படி பொண்ணுங்களைப் பார்க்கறது”

“பொண்ணுங்களைப் பார்க்கறதுதான் தப்பு. தேவதைகளைப் பார்க்கலாம்” என்று ஆகாஷ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தான். அவள் கண்களில் ஒரு விநாடி ஒரு விளக்கெரிந்து அணைய… ``மணிரத்னம், கௌதம்மேனன் படமெல்லாம் நிறையப் பார்ப்பீங்களா?” என்றாள்.

“ஏன்?”

“முதல் சீன்லயே ஹீரோயின்கிட்ட இந்த மாதிரி ரொமான்ட்டிக்கா பேசி கவுத்திட லாம்ன்னு நினைக்கிறீர்களா?”

“அப்ப நான் ரொமான்ட்டிக்கா பேசுறனா?” என்றவுடன், அவள் நாக்கைச் சட்டென்று கடித்தபடி, தலையில் லேசாக அடித்துக்கொண்டாள். தொடர்ந்து ஆகாஷ் சிரிப்புடன், “ஓகே. என்னைப் பிடிச்சிருக்கா... ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டு கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கலாமா?”

“ஹேய்… இப்படி டக்குன்னு கேட்டா எனக்குப் பதில் தெரியலை.”

“ஓகே… நேத்து நான் உங்களைப் பொண்ணுப் பாத்துட்டுப் போனப்பறம் ராத்திரி பெட்ல படுத்துக்கிட்டு மேல சுத்துற ஃபேனை பார்த்துக்கிட்டே சிரிச்சீங்களா?’'

“இல்லை” என்றாள் புன்னகையை அடக்கியபடி.

“வாட்ஸ்அப்புல என் போட்டோவை ஜூம் பண்ணிப் பார்த்தீங்களா?”

“இல்லை.”

“பெட்ல குப்புற படுத்துக்கிட்டு, காலை மேலேயும், கீழேயும் ஆட்டிக்கிட்டு, கட்டை விரலை கன்னாபின்னான்னு கடிச்சுக்கிட்டு, `சீ'ன்னு சுவரைப் பார்த்துச் சொன்னீங்களா... இல்லே, கண்ணாடியைப் பார்த்து, ‘ஏய் லூசு… உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா?’ன்னு கேட்டீங்களா?”

“இல்ல...”

“அப்ப சரி…” என்று எழுந்த ஆகாஷ், “சப்போஸ்… இனிமே உங்க கனவுல என்னோட, `என் மடியில் துயில் கொள்ளடா'ன்னு கிக்கா பாடினா, என்னைப் பத்தி நினைக்கிறப்பல்லாம் உங்க மனசுக்குள்ள கம்பி மத்தாப்பூ எரிஞ்சுதுன்னா… இல்ல… பட்டாம்பூச்சி பறந்துச்சுன்னா சொல்லுங்க. ஹனிமூன் பண்ணிக்கலாம்… சீ… கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

உடனே பதற்றத்துடன் எழுந்த பூஜா, “எக்ஸ்க்யூஸ் மீ” என்றவள், “கம்பி மத்தாப்பு எரிஞ்சிருச்சு. பட்டாம்பூச்சி பறந்துடுச்சு” என்றாள் வெட்கத்துடன்.

அவ்வளவுதான். “மாங்கல்யம் தந்துனானே…மமஜீவன ஹேதுனா…” என்று திருமணத்தை முடித்துக்கொண்டார்கள்.

ஒரு திரைப்படத்தில் இந்த மாதிரி அட்ராக்டிவ்வாகப் பேசிவிட்டு கல்யாணம் செய்துகொண்டு அவர்கள் சந்தோஷமாக வாழ முடியும். ஏனெனில், அதற்குப் பிறகு வரும் காட்சிகளை இயக்குநர்தான் எழுதியிருப்பார்.

ஆனால், நம் வாழ்க்கையில் அடுத்து வரும் காட்சிகள் என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே சந்திக்கும்போது இது போன்று மேம்போக்காக ஜாலியாகச் சிரித்துப் பேசுவதன் மூலமாக ஒருவரின் குணத்தை அறியமுடியாது. வேறு எப்படி அறிய முடியும்?

குணங்களைக் கண்டறிவதற்கு முன்பு, நீங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் அல்லது பெண்ணிடம் எந்த நல்ல குணங்களை எதிர்பார்க்கிறீர்கள்... எந்த கெட்ட குணங்கள் இருக்கக்கூடாது என்பது குறித்து முதலில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

அடுத்து,

பலரும் ரசனை, குணம், பழக்கம் என்று மூன்றையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். ரஹ்மான் இசை பிடிக்கும் என்பது ரசனை. அடிக்கடி காபி குடிப்பது பழக்கம். கோபம்கொள்வது குணம்.

எனவே, குணம் சரிபட்டு வருமா என்று மட்டும் பாருங்கள். ரசனை, பழக்கவழக்கங்கள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அடுத்து, இந்தச் சந்திப்புகள் மூலமாக ஒரு நபரின் அத்தனை குணங்களையும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஒன்றுமே தெரியாமலிருப்பதைவிட, ஒரு சில குணங்களையாவது அறிந்துகொள்வது நல்லதுதானே... எனவே, உங்கள் எதிர்கால வாழ்க்கைத்துணையைச் சந்திக்கும்போது பின்வருவனவற்றை அறிந்துகொள்ள முயற்சி செய்வீர்...

முதல் சந்திப்பில், உண்மையிலேயே அவர்கள் மனத்துக்குப் பிடித்துதான் நம்மைத் திருமணம் செய்கிறார்களா... இல்லை, குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒப்புக் கொள்கிறார்களா என்று கேட்டு அறிந்துகொள்ளவும்.

இந்த சந்திப்புகளில் இருவரும் போலித்தனமாக நடிக்காதீர்கள். அதாவது… எதிர்த்தரப்பை ஈர்க்க வேண்டும் என்பதற்காக உங்கள் பலவீனமான குணங்களை எல்லாம் மறைத்துவிட்டு, மிகவும் நல்லவர் போல் காட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் இயல்பு என்னவோ அப்படியே இருங்கள். நீங்கள் பொய்யாக நடித்துவிட்டு, பின்னர் திருமணத்துக்குப் பிறகு சாயம் வெளுக்கும்போது பிரச்னைகள் வெடிக்கும். எனவே, உண்மையாக இருங்கள்.

பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எடுத்தவுடனேயே இன்டர்வியூ போல அடுத்தடுத்து அதிரடியான கேள்விகளைக் கேட்டு, எதிர்த்தரப்பை மிரண்டு ஓட வைக்காதீர்கள்.

ஒரு பூ மெள்ள மெள்ள இயல்பாக மலர்வது போல், கொஞ்சம் கொஞ்சமாக பல நாள்கள் பேசி, உரையாடலின் போக்கில் நீங்கள் விரும்பக்கூடிய அல்லது விரும்பாத குணங்கள் அவர்களிடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் தன்னை திருமணம் செய்தவுடன் அவன் அல்லது அவள் தங்களைச் சுற்றியிருந்தோரை அப்படியே அம்போவென்று விட்டுவிட்டு தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு அனைவரையும் விட்டுவிட்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனோதத்துவ ஆய்வாளர்கள், “இவ்வாறு வருபவர்களை நம்ப முடியாது. தங்கள் பெற்றோரை, தங்கள் உறவினரை, தங்கள் நண்பரை அன்போடு கவனித்துக் கொள்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ளோரை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக தங்கள் மண வாழ்க்கை ஜோடியுடனும் அன்பாக அவர்களை மகிழ்விப்பார்கள்’ என்கிறார்கள். ஏனெனில், அவர்கள் அடிப்படையில் நல்லவர்கள். நன்றி மறவாத குணமுடையவர்கள். அந்த குணத்தால் உங்களையும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இவ்வாறு சந்திக்கும்போது மிகவும் தனிமையான இடத்தில் சந்திக்காமல், பொது இடங்களில் சந்தியுங்கள். ஏனெனில், பொது இடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து சில அடிப்படையான குணங்களை அறிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு அல்லது அவர் பக்கம் நியாயமே இல்லாத விஷயத்துக்கு ஒரு ஹோட்டல் பேரரிடம் அல்லது ஒரு கடையின் விற்பனையாளரிடம் அவர்கள் வெட்டிச்சண்டை போடுகிறார்களா... தன் மீது தவற்றை வைத்துக்கொண்டு பிறர் மீது பழியைத் தூக்கிப்போடுகிறார்களா என்றெல்லாம் கவனியுங்கள். ஏனென்றால், பிற்காலத்தில் அவர்கள் உங்களிடமும் அப்படி நடந்துகொள்ளலாம். அதற்கு மாறாகப் பிறரிடம் கனிவாக இருத்தல், மற்றவர்களை மரியாதையுடன் நடத்துதல், பிறர் செய்யும் தவறுகளைப் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையுடன் மன்னித்தல் போன்ற குணங்கள் எல்லாம் இருந்தால், இந்த சந்திப்புகளில் நீங்கள் தெரிந்துகொள்ளமுடியும்.

உங்களுடைய நியாயமான கனவுகள், லட்சியங்கள் (‘நியாயமான’ என்ற வார்த்தையை கவனியுங்கள்) போன்றவை குறித்து பேசும்போது அவற்றைப் பொருட்படுத்தாமல், சரியாகக் காதில்கூட வாங்காமல் அலட்சியப்படுத்துகிறாரா அல்லது ஆர்வத்துடன் அதைப் பற்றி கேட்டறிந்து உதவி செய்வது போல் பேசுகிறார்களா என்பதைக் கவனிக்கவும்.

பேசும்போது பண விஷயத்திலேயே குறியாக இருக்கிறார்களா...சுற்றி வளைத்து உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன... அந்தச் சொத்து யார் பெயரில் இருக்கிறது... பண விவகாரங்கள் போன்ற விஷயங்களை எல்லாம் நோண்டித் துருவி விசாரிக்கும் பணத்தாசை பிடித்தவர்கள், வரவுக்கு மீறி ஆடம்பரமாக செலவு செய்யும் குணம் உள்ளவர்களையெல்லாம் தொடர்ச்சியான சந்திப்புகள் மூலம் அறிந்துவிட முடியும்.

அதேபோல நீங்கள் அவர்களிடம் பல நாள்களாகப் பேசிப் பழகிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அவர்களுடைய நெருங்கிய நண்பர்களிடம் நீங்கள் பேசிப் பழகுவதை அவர்கள் பதற்றத்துடன் தவிர்க்க நினைத்தால், எதையோ மறைக்க நினைக்கிறார்கள் என்று பொருள். அதுபோன்ற நபர்கள் குறித்து நன்கு விசாரிக்கவும்.

வெளியிடங்களில், கோபப்படக்கூடிய சூழ்நிலைகளில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார்... எந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துகிறார்... இம்மாதிரியான நபரை நம்மால் கையாள முடியுமா, முடியாதா என்றெல்லாம் யோசியுங்கள்.

இவ்வாறு குணங்களை ஆராயும்போது, அவர்கள் எல்லா விஷயத்திலும் நமக்கு ஆமாம் சாமி போடுபவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் நீங்களே வடிவமைத்துத் தயாரிக்கும் ரோபோ மட்டும்தான் நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடும்.

பேசிப் பழகி ஓரளவு குணங்களை அறிந்த பிறகு, கொஞ்சம் விவரமான, உங்கள் நலனில் அக்கறைக் கொண்ட அனுபவசாலி நபருடன் இதைப் பற்றி கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரவும். அரை குறைகள், நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத லட்சியவாதம் கொண்டவர்கள், விவாகரத்து ஆனவர்கள், மணவாழ்க்கையில் சந்தோஷமின்றி இருப்பவர்களிடமெல்லாம் இது குறித்து பேசாதீர்கள். அவர்கள் எதிர்மறையான கருத்துகளையே சொல்வார்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் சர்வ நல்ல குணங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படியெல்லாம் யாரும் இருக்க மாட்டார்கள். ஓரளவு நியாயமான நபராக, அவரை மேனேஜ் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் போதும்.

பத்துக்கு ஆறு அல்லது ஏழு மார்க் வாங்கினால்கூட ஓகே சொல்லிவிட்டு சிம்லாவுக்கு ஹனிமூன் செல்வது (மாஸ்க்குடன்) போல கனவு காணலாம்.

(நல்ல சாய்ஸ் அமையும்!)