Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

OPS வளையவில்லை என்றால்தான் அது செய்தி மன்னா. வளைந்தார் என்பது செய்தி அல்ல; தினசரி வாழ்வியல் நிகழ்வு.

வலைபாயுதே

OPS வளையவில்லை என்றால்தான் அது செய்தி மன்னா. வளைந்தார் என்பது செய்தி அல்ல; தினசரி வாழ்வியல் நிகழ்வு.

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/HariprabuGuru

தலைவருக்குக் காய்ச்சல்னு செய்தி வந்தது வதந்தியாமே...

அவரைத் தலைவர்னு சொல்லுறதே வதந்திதான் போவியா...

twitter.com/ thecommonman__

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய சமூக நீதி முன்னெடுப்பு. இதற்கு காரணம் யாராக இருந்தாலும் “வாழ்க நீ எம்மான்.” இது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ நுழைவு என்றிருந்த காலத்திலே நடைமுறைப் படுத்தியிருந்தால் மேலும் பலர் பயனடைந்திருப்பார்கள். இதை NEET என்பதால் சலுகை என்று சுருக்காமல் பொறியியல், மற்ற படிப்புகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

twitter.com/TheBluePen25

OPS வளையவில்லை என்றால்தான் அது செய்தி மன்னா. வளைந்தார் என்பது செய்தி அல்ல; தினசரி வாழ்வியல் நிகழ்வு.

வலைபாயுதே

twitter.com/skpkaruna

ஒவ்வொருவர் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்றார் ஒருவர். அதை நம்பினவர் மனநலன் அற்றவராம்! சொன்னவரோ நாட்டின் பிரதமராம்! விசித்திரமான நாடு.

twitter.com/jeevanlancer

ஸ்டாலின் : நான் ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்றிருக்கிறேன்.

எடப்பாடி : இது என் மனதில் தோன்றிய சிந்தனை, மாண்புமிகு அம்மாவின் அரசு தாமாகவே ராஜினாமா செய்து... ஆட்சியைத் துறக்கும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

twitter.com/sweetsudha1

சமகாலத்துப் பெண்களுக்கு, ஒரு கார்ப்பரேட் கம்பெனி வேலை தரும் தன்னம்பிக்கையை, ஒரு நல்ல கணவனால் தர முடிவதில்லை!

twitter.com/isatyagrahaa

தெரிந்தோ தெரியாமலோ ஒரு 9v பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்கு பதிலாக ஆளும் கட்சியில் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேருந்தைக் கொளுத்தி 3 பெண்களை உயிருடன் எரித்து சிறைக்குச் சென்று நன்னடத்தை மூலம் சில ஆண்டுகளில் வெளியில் வந்துவிடலாம் என்ற அளவுக்கு இறங்கிவிட்டன நமது சட்டங்கள்.

twitter.com/ItsJokker

வேலையில்லாத் திண்டாட்டத்தை எப்பிடி சரி பண்ணப் போறீங்க?!

ஜி ~ அதாவது இப்ப இருக்குற 8 மணி நேர வேலைய 12 மணிநேரமா மாத்திட்டா, பாதிப் பேரு சீக்கிரமே செத்துருவான், மீதிப்பேரு வேலைய விட்டுப் போயிருவான்.

அப்போ ஆட்டோமெடிக்கா அந்த வேலையெல்லாம் நம்ம இளைஞர்களுக்குத்தானே. எப்பிடி நம்ம ஐடியா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

twitter.com/shivaas_twitz

தினமும் மதியம் முருகன் கைது, மாலை உதயநிதி கைது.

போலீஸுக்கு வார விடுமுறை தேவை தான்.

twitter.com/pachaiperumal23

உலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்.

- அமித் ஷா.

இந்தியில் பேசமுடியாமல்போனதுக்கு நாங்களும் வருந்துறோம். எங்களைக் கட்டாயப்படுத்தாதீங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism