Published:Updated:

ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு

விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

Published:Updated:
ஆசிரியர் தகுதித் தேர்வு

இணையதளம் மெதுவாகச் செயல்படுவதாக விண்ணப்ப தாரர்கள் புகார் எழுப்பிய நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்கலாம் எனக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு, தாள்-1 மற்றும் தாள் 2 (TET)  எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 13-ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வந்தனர். 

ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இணையதளம் போதுமான வேகத்துடன் செயல்படமல் மிகவும் மெதுவாகச் செயல்படுவதாகவும் இதனால் விண்ணப்பிக்க இயலவில்லை என்றும் விண்ணப்ப தாரர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism