கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

‘ஜெய்சங்கரின் குடும்பப் பின்னணி, நாடக ஆர்வம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆர்வம், மனிதநேயம், அந்திமக்காலம் என எல்லாவற்றையும் பேசும் நூலில் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், சர்ச்சைகள் எனப் பெரிதாய் ஒன்றுமேயில்லை.

வாழ்க்கை வரலாற்று நூல்கள் பெரும்பாலும் ஒரு துறையில் உச்சம் அடைந்தவர்களைப் பற்றித்தான் எழுதப்படும். அதுவும் திரைத்துறையைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி என்னும் இரு சகாப்தங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் தனக்கான ஆக்‌ஷன் பாணி திரைப்படங்களை நிர்ணயித்துக்கொண்டு அந்தப் பாதையில் பயணித்த ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் என்பதால் கவனம் ஈர்க்கிறது.

‘கூடுமானவரை எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு லட்சியமில்லை’ என்ற ஜெய்சங்கர் தன் வாழ்வின் இறுதிவரையில் அதை நோக்கியே வாழ்ந்திருக்கிறார் என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. கௌ பாய், ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள், கே.ஆர்.விஜயாவை சுற்றி சுற்றி வந்து நடனமாடும் காதல் திரைப்படங்கள் வழியே நமக்கு அறிமுகமான ஒரு நடிகர், தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கருணை இல்லங்களுக்கு ஒதுக்கியிருந்தார் என அறியும்போது ஆச்சர்யம் மேலோங்குகிறது. அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய படங்கள்தான் அந்தக் காலத்து ஜெய்சங்கர் பாணி திரைப்படங்கள். அதில் உணர்ச்சி ததும்பும் முகபாவங்களோ, அழுகைக் காட்சிகளோ பெரும்பாலும் இருக்காது.

படிப்பறை

‘ஜெய்சங்கரின் குடும்பப் பின்னணி, நாடக ஆர்வம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் ஆர்வம், மனிதநேயம், அந்திமக்காலம் என எல்லாவற்றையும் பேசும் நூலில் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், சர்ச்சைகள் எனப் பெரிதாய் ஒன்றுமேயில்லை. நூல் ஆசிரியர் இனியன் கிருபாகரன் புத்தகம் முழுக்க, பல பழைய பேட்டிகளை, பத்திரிகைச் செய்திகளை மேற்கோள்காட்டுகிறார். இந்தத் தேடல்தான் இந்தச் சரிதையை மேலும் அழகாக்குகிறது. அதே போல், சில பக்கங்களைப் படத்துக்கென ஒதுக்காமல், புத்தகம் முழுக்கவே ஓர் அங்கமாகக் குவிந்துகிடக்கும் புகைப்படங்கள், புத்தகத்துக்கான மெனக்கெடலைக் காட்டுகின்றன. சற்றே அதீதமான புகழ்ச்சி உரைகள்தான், புத்தகத்தின் மீதான நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்புகின்றன.

ஆனாலும் ஜெய்சங்கர் என்ற நாம் அறிந்த நடிகர் குறித்து நாம் அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்ளப் படிக்க வேண்டிய புத்தகமிது.

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்

இனியன் கிருபாகரன்

வெளியீடு:

இனியன் பதிப்பகம்

13/6, கண்ணன் காலனி முதல் தெரு,

ஆலந்தூர், சென்னை -16

மொபைல்: 7708697977

விலை: ரூ.280

பக்கங்கள்: 240