Published:Updated:

தமிழகத்தில் ஒரு வாரத்தில் விற்றுத்தீர்ந்த 1 லட்சம் `கம்யூனிஸ்ட் அறிக்கை' புத்தகங்கள்! #RedBookDay

The Communist Manifesto
The Communist Manifesto

உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட்டுகளால் கொண்டாடப்பட்டுவரும் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு 172 ஆண்டுகள் ஆகிறது.

கார்ல் மார்க்ஸ்
மிகச் சிறந்த சிந்தனையாளர், தத்துவவாதி, எழுத்தாளர், சமூகக் கோட்பாட்டாளர் மற்றும் பொருளாதார நிபுணர், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் பற்றிய கோட்பாடுகளுக்குப் பிரபலமானவர்.

இவர், ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸுடன் இணைந்து, 'கம்யூனிஸ்ட் அறிக்கை' (Communist Manifesto) எனும் புத்தகத்தை 1848-ல் வெளியிட்டார். அப்போது, கார்ல் மார்க்ஸால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், இன்று வரை உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு 172 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி!

கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களால் பிப்ரவரி 21-ம் தேதியை சிவப்புப் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டு, சூரியன் உதிக்கும் ஜப்பானிலிருந்து சூரியன் மறையும் சிலி வரை உலகம் முழுவதும் வாசிக்கப்பட்டுவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக சீனா மற்றும் கொரியா நாடுகளில் மட்டும், இந்த வருடம் சிவப்புப் புத்தக தினம் கொண்டாடப்படவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 10,000-த்துக்கும் மேற்பட்ட இடங்களில் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' புத்தகம் நேற்று வாசிக்கப்பட்டது.

Red Book Day | சிவப்பு புத்தக தினம்
Red Book Day | சிவப்பு புத்தக தினம்

இந்த புத்தக வாசிப்பை முன்னிட்டு, நேற்று முன்தினம் சென்னையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜி.நாகராஜன் சிறப்புரையாற்றினார், ஆர்.நல்லக்கண்ணு பங்கேற்க முடியவில்லை. சிவப்புப் புத்தக தினத்திற்காக அச்சடிக்கப்பட்ட ஒரு லட்சம் `கம்யூனிஸ்ட் அறிக்கை'‌ புத்தகம் ஓரே வாரத்தில் விற்றுத் தீர்ந்துபோயின என்று தமிழக கம்யூனிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு