Published:Updated:

ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?

தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எதிர்த்துக் கொண்டிருக்கும் மேற்சொன்ன பல திட்டங்களைக் கொண்டுவருவதில் மத்திய அரசு மீண்டும் முயற்சிகளை மேற்கொள்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துவருகிறது.

ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?
ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?

மிழக மக்கள், கடந்த சில ஆண்டுகளாகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் சூழலியல் பிரச்னைகள் தொடர்ச்சியாகச் சிக்கலாகிக்கொண்டேயிருக்கிறது. சமீபத்தில்கூட நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஹைட்ரோகார்பன் மற்றும் ஓ.என்.ஜி.சி புதிய திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுவருவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதில் வேதாந்தா அமைக்கவுள்ள ஹைட்ரோகார்பன் கிணறுகள் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளிலிருந்து 0.49 கிலோமீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளது. இதனால் மிக முக்கியமான அலையாத்திக் காடுகளே அழிந்துவிடுமென்றும், மற்ற பகுதிகளில் அமைக்கப்படவிருக்கும் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி-யின் கிணறுகளால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றும் அவர்கள் போராடிவருகிறார்கள். 

ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி, எட்டு வழிச் சாலை, நியூட்ரினோ, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் என்று பல திட்டங்களை  தமிழகத்தில் மக்கள் எதிர்த்துவருகிறார்கள். சமீபத்தில் மேலும், 274 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேதாந்தாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இரண்டு தொகுதிகளாகப் பிரித்து கடல் மற்றும் நிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது, வேதாந்தா நிறுவனம். தொகுதி ஒன்றில், வங்காள விரிகுடாவில் 1,794 சதுர கிலோமீட்டர் கடலுக்குள் அமைக்கவும் விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் 141 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 5,960.93 கோடி ரூபாயில் 1,935 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 116 கிணறுகள் முதல் தொகுதியில் அமைக்கப்படவிருக்கின்றன. 

ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?

இரண்டாம் தொகுதியில், மொத்தம் 2,574 சதுர கிலோமீட்டர் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வங்காள விரிகுடாவில் மட்டுமே 2,393 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அமைந்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் மொத்தம் 181 சதுரகிலோமீட்டர் நிலத்தில் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இரண்டாம் தொகுதியில் அமைக்கப்பட இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மதிப்பு, 7,848.635 கோடி ரூபாய். மரக்காணத்திலிருந்து நாகப்பட்டினம் வரை இருக்கும் கடல் பகுதி, ஆழமற்ற கரைக்கடல் அதிகமுள்ள பகுதி. இங்குதான் அதிகமான மீன்வளம் உள்ளது. சிறு, குறு மீனவர்களின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் வரவிருக்கின்றன. 

இதேபோல் வங்காள விரிகுடா, கடலூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் ஓ.என்.ஜி.சி கிணறுகள் 1,069 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கின்றன. இங்கு சுமார் 40 கிணறுகள் புதிதாக அமைக்க 1,400 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுபோக புவனகிரி, பெரியகுடி பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் ஓ.என்.ஜி.சி கிணறுகளில் விரிவாக்கத் திட்டங்களும் 3,750 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது, பி.ஜே.பி. ஆனால், தமிழகத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட வெற்றிபெறவில்லை. மத்தியில் வெற்றிபெற்றுள்ள ஒரு கட்சியை ஒரு மாநிலம் மொத்தமுமே எதிர்த்துவருகிறது. இந்நிலையில், தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எதிர்த்துக் கொண்டிருக்கும் மேற்சொன்ன பல திட்டங்களைக் கொண்டுவருவதில் மத்திய அரசு மீண்டும் முயற்சிகளை மேற்கொள்கிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துவருகிறது.  

ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?
ஹைட்ரோகார்பன்... நியூட்ரினோ... தமிழக மக்களின் எதிர்ப்புக்கு மோடி அரசு என்ன சொல்லப்போகிறது?

இதுகுறித்து தமிழக பி.ஜே.பி. மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். ``நியூட்ரினோ திட்டத்திற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எட்டு வழிச் சாலைத் திட்டத்தைக் கொண்டுவரவே நினைக்கிறோம். மத்திய அரசு சமாதானம் செய்து அந்தத் திட்டத்தைக் கொண்டுவரும் என்று பிரசாரத்திற்கு வந்திருந்தபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். நாட்டிற்கு எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் கொண்டுவருவோம். காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்கம் தேவைப்பட்டால் செய்வார்கள். ஸ்டெர்லைட் பிரச்னையில் மாநில அரசு அதைத் திறக்க மாட்டோமென்று சொல்லியுள்ளார்கள். 

தமிழகத்தில் ஏற்கெனவே 169 ஹைட்ரோகார்பன் கிணறுகள் செயலாக்கத்தில் உள்ளன. புதிய திட்டங்களுக்கு ஆய்வுசெய்யச் சொல்லியுள்ளார்கள். மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டங்கள் வேண்டாமென்று சொல்வதாக இருந்தால், இருக்கிற 169 கிணறுகளை என்ன செய்யப்போகிறார்கள்? அவற்றை ஏற்கெனவே காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இங்கு ஹைட்ரோகார்பன் எடுத்துக்கொண்டிருக்கிறோம். புவனகிரியிலிருந்து தொடங்கி ராமநாதபுரம் வரை இருக்கும் 169 கிணறுகளால் என்னென்ன நன்மைகள் நடந்தன என்பதைப் பார்க்கவேண்டும். விவசாயிகள் உண்மையிலேயே ஓ.என்.ஜி.சி போன்ற திட்டங்களை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. 45 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி கிணறுகள் தமிழகத்தில் இருக்கின்றன. இவை வேண்டாமென்றால், இருப்பவற்றை மூடிவிடுவார்களா என்ற கேள்வி எழுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மக்களுக்கு எதிரானதல்ல. அவை நன்மையே செய்யும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். நாங்கள் புரியவைப்போம்" என்று கூறினார். 

Vikatan