Published:Updated:

செல்லாக்காசு 50 நாள்..! சொன்னதைச் செய்தாரா மோடி? உங்கள் கருத்து என்ன? #Demonetisation #VikatanSurvey

விகடன் விமர்சனக்குழு
செல்லாக்காசு 50 நாள்..! சொன்னதைச் செய்தாரா மோடி? உங்கள் கருத்து என்ன? #Demonetisation #VikatanSurvey
செல்லாக்காசு 50 நாள்..! சொன்னதைச் செய்தாரா மோடி? உங்கள் கருத்து என்ன? #Demonetisation #VikatanSurvey

வம்பர் 8-ந் தேதி இரவு, தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்று அறிவித்தார். மேலும் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 புழக்கத்தில் விடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட தினம் தொடங்கி இன்றுவரை, மக்கள் ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்பும், வங்கிகளிலும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை காரணமாக, 150-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது அத்தனையும் நாட்டில் சுழற்சியில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று பிரதமர் கூறினார். மேலும் இந்த சிக்கல்கள் அனைத்தும் 50 நாட்களுக்குள் சீராகி விடும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் அறிவித்த 50 நாட்கள் கெடு, இன்றுடன் (28.12.2016) முடிவடைகிறது. மோடி கூறியது போல் நிலைமை சீரானதா? கீழே உள்ள கேள்விகளுக்கு உங்களின் கருத்து என்ன?