எது ஊர்ந்ததோ
அது நன்றாகவே ஊர்ந்தது.
எது குனிகிறதோ
அது நன்றாகவே குனிகிறது.
எது தவழ்ந்திட நினைக்கிறதோ
அது நன்றாகவே தவழ்ந்தது.

உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய்
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ ஜெயித்திருந்தாய்
அது தோற்பதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது பன்னீரிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது சம்பந்திக்கே லம்ப்பாகக் கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை வேறொருவருடையதாகிறது.

‘சாணக்கியனாக இருந்த தே.மு.தி.க
சத்ரியனாக மாறும் நேரமிது’ என்கிறோம்.
சாணக்கியனாகவும்
சத்ரியனாகவும் மாற முடிகிற நீங்கள்
இப்போதேனும் மனிதனாக
மாறுங்களேன் என்கிறது இன்னோர் அணி
ஏற்கெனவே கேப்டனாக இருப்பவரை
மனிதனாகவும் மாறச் சொன்னால்
வர்ற கோவத்தில்
தூக்கி அடிச்சிப்புட்டு
தனி அணியா போய்ட்டே இருப்பார் பார்த்துக்க!

ஓரஞ்சாரத்தாருக்கு உதவிவிடக் கூடாதென்றே
மக்கள் நீதியை ‘மையத்தில்’ இருத்தி அடைகாக்கும் நான்
ஆட்டோவிலும் இருப்பேன்
ஆகாயத்திலும் இருப்பேன்
ஆயினும்
டார்ச் அடிப்பவர்களின் ஞானக்கண்ணுக்கே காட்சியளிப்பேன்.
தளர்ந்துள்ள இத்தமிழகத்தைப்
பெயர்த்தெடுத்துப் போய்
வளர்ந்துள்ள நாடுகளுக்கு இணையாக்கி வைத்திட
ஒத்த கருத்துள்ளோரே
ஓடிவாருங்கள் எம் அணிக்கு
எஞ்சியிருப்பதோ இன்னும்
234 சீட்டுகள் மட்டுமே.

செல்லுக்குள் ஸ்லீப்பராக இருந்தவரின்
ஸ்லீப்பர் செல்கள்
விழித்தெழ வேண்டிய நேரத்திலும்
விழிக்காதிருப்பதுபோல் விழித்திருந்ததால்
செல்லுக்குள் ஸ்லீப்பரே
ஸ்லீப்பர் செல்லான தியாகம் கண்டு
திகைத்துக் கிடக்கிறேன்.

சித்தி என்றாலே வீடுதான்
வீட்டுக்கே சித்தி போயிருப்பது ஞானத்தால்
வீடென்றால் குக்கர் இருக்கும்
குக்கர் இல்லாவிடினும் டோக்கன் இருக்கும்
குக்கரின் விசில் சத்தத்தை
கட்சியின் அறைகூவலாய் உணரும் சித்தி
தியாகத் தலைவலியாய்
இல்லையில்லை தியாகத் தலைவியாய்
மீண்டும் வருவார்!

மண்ணில் விண்ணில் மலையில் கடலில்
என்னிலும் தகுதியானோர் யாருமில்லை முதல்வராக
ஆண்டு வருமானம் ஆயிரத்தில்
ஆடம்பரமாய் வாழும் தொல்பழஞ்சூத்திரம்
ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளைக்கும் உரித்தாகும்
எமதாட்சியில்
ஆடுமாடு மேய்த்திருந்தால் அலுப்பிருக்காது
ஆமைக்கறி தின்றுவந்தால் கொழுப்பிருக்காது
ரசத்துக்குள்ளே தேடிப்பாரு பருப்பிருக்காது
ராத்திரியில் அடுப்பணைத்தால் நெருப்பிருக்காது.

ஐபேக் வருவதற்கு முன்னெடுங்காலந்தொட்டே
‘கோபேக் மோடி’யென கொந்தளிக்கும் தமிழகத்தில்
நானாக அறிவிக்கும் நல்லபல திட்டங்களைத்
தானாக ஓடிவந்து நிறைவேற்றும் எடப்பாடி
‘அதிமுக அரசை அகற்றும்
என் திட்டத்தையும்’
எனக்கும் முன்பாகவே
ஏற்றெடுத்துச் செய்திருந்தால்
தேர்தல்தான் எதற்கு...
தெண்டச்செலவுகள்தான் எதற்கு?

எது ஊர்ந்ததோ
அது நன்றாகவே ஊர்ந்தது.
எது குனிகிறதோ
அது நன்றாகவே குனிகிறது.
எது தவழ்ந்திட நினைக்கிறதோ
அது நன்றாகவே தவழ்ந்தது.

உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய்
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ ஜெயித்திருந்தாய்
அது தோற்பதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது பன்னீரிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது சம்பந்திக்கே லம்ப்பாகக் கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை வேறொருவருடையதாகிறது.

‘சாணக்கியனாக இருந்த தே.மு.தி.க
சத்ரியனாக மாறும் நேரமிது’ என்கிறோம்.
சாணக்கியனாகவும்
சத்ரியனாகவும் மாற முடிகிற நீங்கள்
இப்போதேனும் மனிதனாக
மாறுங்களேன் என்கிறது இன்னோர் அணி
ஏற்கெனவே கேப்டனாக இருப்பவரை
மனிதனாகவும் மாறச் சொன்னால்
வர்ற கோவத்தில்
தூக்கி அடிச்சிப்புட்டு
தனி அணியா போய்ட்டே இருப்பார் பார்த்துக்க!

ஓரஞ்சாரத்தாருக்கு உதவிவிடக் கூடாதென்றே
மக்கள் நீதியை ‘மையத்தில்’ இருத்தி அடைகாக்கும் நான்
ஆட்டோவிலும் இருப்பேன்
ஆகாயத்திலும் இருப்பேன்
ஆயினும்
டார்ச் அடிப்பவர்களின் ஞானக்கண்ணுக்கே காட்சியளிப்பேன்.
தளர்ந்துள்ள இத்தமிழகத்தைப்
பெயர்த்தெடுத்துப் போய்
வளர்ந்துள்ள நாடுகளுக்கு இணையாக்கி வைத்திட
ஒத்த கருத்துள்ளோரே
ஓடிவாருங்கள் எம் அணிக்கு
எஞ்சியிருப்பதோ இன்னும்
234 சீட்டுகள் மட்டுமே.

செல்லுக்குள் ஸ்லீப்பராக இருந்தவரின்
ஸ்லீப்பர் செல்கள்
விழித்தெழ வேண்டிய நேரத்திலும்
விழிக்காதிருப்பதுபோல் விழித்திருந்ததால்
செல்லுக்குள் ஸ்லீப்பரே
ஸ்லீப்பர் செல்லான தியாகம் கண்டு
திகைத்துக் கிடக்கிறேன்.

சித்தி என்றாலே வீடுதான்
வீட்டுக்கே சித்தி போயிருப்பது ஞானத்தால்
வீடென்றால் குக்கர் இருக்கும்
குக்கர் இல்லாவிடினும் டோக்கன் இருக்கும்
குக்கரின் விசில் சத்தத்தை
கட்சியின் அறைகூவலாய் உணரும் சித்தி
தியாகத் தலைவலியாய்
இல்லையில்லை தியாகத் தலைவியாய்
மீண்டும் வருவார்!

மண்ணில் விண்ணில் மலையில் கடலில்
என்னிலும் தகுதியானோர் யாருமில்லை முதல்வராக
ஆண்டு வருமானம் ஆயிரத்தில்
ஆடம்பரமாய் வாழும் தொல்பழஞ்சூத்திரம்
ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளைக்கும் உரித்தாகும்
எமதாட்சியில்
ஆடுமாடு மேய்த்திருந்தால் அலுப்பிருக்காது
ஆமைக்கறி தின்றுவந்தால் கொழுப்பிருக்காது
ரசத்துக்குள்ளே தேடிப்பாரு பருப்பிருக்காது
ராத்திரியில் அடுப்பணைத்தால் நெருப்பிருக்காது.

ஐபேக் வருவதற்கு முன்னெடுங்காலந்தொட்டே
‘கோபேக் மோடி’யென கொந்தளிக்கும் தமிழகத்தில்
நானாக அறிவிக்கும் நல்லபல திட்டங்களைத்
தானாக ஓடிவந்து நிறைவேற்றும் எடப்பாடி
‘அதிமுக அரசை அகற்றும்
என் திட்டத்தையும்’
எனக்கும் முன்பாகவே
ஏற்றெடுத்துச் செய்திருந்தால்
தேர்தல்தான் எதற்கு...
தெண்டச்செலவுகள்தான் எதற்கு?