Published:Updated:

`அலைகடலே.. அடியேனின் வணக்கம்...!’ - மாமல்லபுரம் கடற்கரையில் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்

Modi in mamallapuram
Modi in mamallapuram

தமிழக பாரம்பர்ய உடையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி கவிதையும் எழுதி அசத்திவிட்டார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த வாரம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பு உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான தொடர்பை காட்டுவதாக அமைந்தது இந்தச் சந்திப்பு என இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.

சீன அதிபர் கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். ஆனால், பிரதமர் மோடி கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். கடற்கரை ஓரத்தில் காலையில் வாக்கிங் சென்றது, அங்கு கிடந்த குப்பைகளை அள்ளியது என நாள் முழுவதும் ட்ரெண்ட் அடித்தார்.

இதுதவிர மாமல்லபுரம் கடற்கரையில் அழகை வர்ணித்து கவிதை ஒன்றையும் இந்தியில் வெளியிட்டு அசத்தினார். ஏற்கெனவே தமிழக பாரம்பர்ய உடையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி கவிதையும் எழுதி அசத்திவிட்டார்.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மாம்மல்லபுரம் கடற்கரையின் அழகை வர்ணித்து எழுதிய கவிதையின் தமிழாக்கம் எனக் கவிதையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டிருந்தார். `அலைகடலே.. அடியேனின் வணக்கம்...!’ எனத் தொடங்கும் அந்தக் கவிதையை இப்போது இணையத்தில் பலர் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்.

பின் செல்ல