பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

பாராட்டுகளும் விமர்சனங்களும்...

ஸ்டாலின் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரை அருமை. நடுநிலைமையே தங்கள் தன்மை என்பதை உணர்த்தும் ஆனந்த விகடனுக்குப் பாராட்டுகள்!

- ஷேக் அப்துல்லா

டாக்டர் தமிழிசை அவர்களின் சித்தாந்தத்தில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டுதான். ஆனால், அனைவரிடமும் நட்புபாராட்டும் அவரது இன்முகத்தை அனைவரும் விரும்பு கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அவரது வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!

- தீனதயாளு ராமசாமி

‘மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரூ. 1.76.000 கோடி’ கட்டுரையில் ‘1999-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது’ என்று எழுதியிருக்கிறீர்கள் ஆனால் அவர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார் என்பதுதான் சரியான தகவல்.

- கலைச்செல்வன்

ஆபிரகாம் பண்டிதர் என்னும் தமிழிசை முன்னோடியின் மறக்கக் கூடாத உயர் சாதனைகளை நம் வாசகர்கள் மனதில் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தமைக்கு, கட்டுரை ஆசிரியர் இரா.துரைப்பாண்டி அவர்களுக்கும், விகடன் குழுமத்திற்கும், மனமார்ந்த நன்றி!

- ராஜேஸ்வரன் பரமேஸ்வரன்

நான் ஆனந்த விகடன் வாசகன். ஆனந்த விகடன் எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஜாடிக்கு ஏற்ற மூடிபோல் காலத்திற்கு ஏற்றாற்போல் நல்ல தகவல்களைத் தருகிறது. அதனால்தான் எப்பொழுதும் நம்பர் 1 ஆக இருக்கிறது.

- ராஜ்

கடிதங்கள்

அமேசான் காட்டுத்தீ பற்றிய ‘இதுவும் இனப் படுகொலை’ கட்டுரை பயம்கொள்ளச் செய்கிறது. வேறு எங்கேயோ எரிகிறது என நினைத்துக் கொண்டு இருக்கிறோம். பாதிப்பு உலகில் உள்ள அனைவருக்கும்தான்.

- பொன்ராஜ்

இயக்குநர் பாண்டிராஜின் பேட்டி படித்தேன். இன்றைய திரையுலகில் பாண்டிராஜ் தனித்து உயர்ந்து நிற்கிறார்.

- சுகர் AR

‘தெலங்கானாவில் ஒலிக்கும் தமிழிசை’ கட்டுரையின் கடைசி பத்தியில் ‘இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் ஒர் அரசியல்வாதியை, அதுவும் 58 வயதிலேயே ஆளுநர் ஆக்கியது இதுதான் முதல் முறை’ என்று எழுதியிருக்கிறீர்கள் ஆனால் ஸ்வராஜ் கௌசல், 37 வயதிலேயே மிசோராம் ஆளுநராக இருந்திருக்கிறார்.

- குருபிரசாத்

முதலில் சீரியஸாக ஆரம்பித்து, பின்பு சிரிப்பாக மாறிவிட்டது. சிரிப்பு தாங்க முடிய வில்லை. ‘ஊழ்வினை’ சிறுகதை அருமை.

- கஸாலி

மிரட்டும் நெருக்கடி தலையங்கம் படித்தேன். வளர்ச்சி என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அது வீக்கம் என்பது இப்போதுதான் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று எழுதியிருப்பது மிக மிகச் சரி.

- கான்

விஞ்ஞானத்தின் சகாப்தம் விக்ரம் சாராபாய் பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது.

- வண்ணன்

‘மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரூ. 1,76,000 கோடி!’ கட்டுரை நமது பொருளாதார மந்த நிலையைத் தோலுரித்துக்காட்டுகிறது.

- சஞ்சீவ், புதுப்பேட்டை