சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

காரசார கொத்து பரொட்டா!

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

கடிதங்கள்

விஜய்காந்த் பற்றிய அலசல் சுருக்கமாக, அதே சமயம் தெளிவாக இருந்தது. உங்களுக்கும் அவருக்கும் ஒரு ராயல் சல்யூட்!

- ரூபிணி சுதர்ஸன் குமார், திருச்சி.

ன்பாக்ஸ் காரசாரமான கொத்துபரோட்டாவாக சுவைத்தது!

- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

டாஸ்மாக் கொலைகளைத் தடுப்போம் தலையங்கம் மிகச்சரியான நேரத்தில் சரியான குரல்!

- பானு, மாடம்பாக்கம்.

ழகங்கள் குறித்த அலசல் அருமை. அதற்கான லே-அவுட்டில் சற்றுத் தள்ளி இருக்கும் ஸ்டாலினை ஓபிஎஸ் பார்க்கும் பார்வை, அக்மார்க் விகடன் ஸ்டைல்!

- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை

ரியான கோணத்தில் எழுதப்பட்டிருந்த ‘ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்’ என்ற கட்டுரை, ‘கேளாரும் வேட்ப மொழிவதாம்’ என்பதற்குச் சரியான சான்று!

- முத்தையா, நத்தம்.

னந்த விகடன் விமர்சனம்​ எப்போதும் படத்தின் தரம் சார்ந்து இருக்குமேயன்றி வணிகம் சார்ந்தோ, நாயகர்களைச் சார்ந்தோ இருக்காது என்பதற்கு ஜீவி, ஹவுஸ் ஓனர் விமர்சனங்கள் சான்று. நல்ல படத்திற்குக் கரவொலிகளைச் சேர்க்கும் உங்களுக்கு நன்றிகள்!

- சியாமளா ரங்கன், மந்தைவெளி.

பொறுப்பான இயக்குநர் என்பது மணிகண்டனின் படங்கள் போலவே பேட்டியிலும் ஜொலித்தது.

- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

ங்கடா, ரொம்ப நாளா ஆளைக்காணோமே என நான் நினைத்த டெல்லி கணேஷ் பேட்டிக்கு நன்றி!

- ப. மூர்த்தி, பெங்களூரு.

ன்ன பாஸ்... வர வர வாசகர் மேடையைப் படிக்காம வேற எதையும் புரட்டத் தோண மாட்டீங்குதே! கலக்கறாங்களே வாசகர்கள்!

- எஸ்.ராமதாஸ், சேலம்.

ல்லூரி திறக்கும் சமயத்தில் டீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான பரிந்துரை வெளியிட்டு, தனது சமூக அக்கறையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது ஆனந்த விகடன்!

- தி. மதிராஜா, சின்னபுங்கனேரி.