சினிமா
தொடர்கள்
Published:Updated:

கடிதங்கள்: நச்சென்ற நங்கூரம்!

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

உலகக் கோப்பைப் போட்டி பற்றிய தொடர் அப்டேட்ஸுக்கு நன்றி. போட்டியைத் தாண்டிப் பல விஷயங்களை அலசிய பாணி மிகச்சிறப்பு! - சுகுமாரன், மணப்பாறை.

90’ஸ் கிட்ஸ் ஆன எனக்கு, நெடுஞ்செழியன் என்பவரைப் பற்றிச் சிலரிடம் உரையாடும்போது கொஞ்சம் தெரிந்ததோடு சரி. ‘நாவலர் ஆன நாராணசாமி’ கட்டுரையைப் படித்த பிறகு விரிவாக அறிந்துகொண்டேன். மேலும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகரித்தது. மிகவும் நன்றி!

- ஆனந்தி சம்யுக்தா, சேலம்.

​இறையுதிர் காடு தொடரில் இந்திரா சௌந்தர்ராஜன் பிரமிக்க வைக்கிறார். ​தமிழும் மெய்ஞ் ஞானமும் விஞ்ஞானமும் கலந்து அடிப்பதில் மெய் மட்டுமா சிலிர்க்கிறது; உயிர்மெய் இரண்டையுமே உலுக்கி எடுக்கிறது!

- பாலு விஜய், vikatan.com ​

‘காவிரி: கைநழுவிப் போகுமா நீதி?’ தலையங்கம் நாம் அனைவரும் காவிரி உரிமைக்கு ஒன்றுகூடுவதற்கான முதல் குரலாக விகடன் குரல் ஒலித்தி ருக்கிறது. ஒன்றிணைவது நம் கடமையே.

- பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்​

`அவங்களுக்கென்ன, சினிமாவில டைரக்டர்’ என்று​ போகிற போக்கில் சொல்கிறோம். `டைட்டில் கார்டு’ பகுதியில் இயக்குநர் ஸ்ரீகணேஷின் வாழ்க்கையைப் பற்றிப் படித்த போது `எதுவும் சுலபமில்லை; எல்லாவற்றுக்குப் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது’ என்று தோன்றியது.

- வி.திலகம், நெல்லை.

கடிதங்கள்: நச்சென்ற நங்கூரம்!

புராஸ்தெட்டிக் மேக்கப் கலைஞர் பல்லவி ஷ்ராஃப் பேட்டியைப் படித்தபோது ‘இதான் ஆனந்தவிகடன்’ என்று தோன்றியது. மற்ற எந்தப் பத்திரிகையிலும் இவரைப் போன்றவர்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது!

- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை.

வாவ்! என் ஃபேவரைட் நடிகர் சரத்பாபு பேட்டிக்கு நன்றி விகடனாரே. அவர் ஜெயலலிதா வுடன் நடித்திருக்கிறார் என்பதையே இப்போதுதான் அறிந்துகொண்டேன்!

- சி.குமாரசாமி, சென்னை.

28 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம், இன்று அவர் மகனுக்கும் டஃப் ஃபைட் கொடுப்பார் என எதிர் பார்க்கலாம்!

- எஸ்.முரளி, ஸ்ரீரங்கம்.

இந்த வார கார்ட்டூனும் அதற்கான தலைப்பும் நச்சென்ற நங்கூரம்!

- சிம்மவாஹினி, வியாசர் காலனி.