சினிமா
தொடர்கள்
Published:Updated:

கடிதங்கள்: பக்கா பயோடேட்டா!

கடிதங்கள்
News
கடிதங்கள்

`சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்’ கட்டுரையில் நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தைப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பத்தாண்டுகளில் உச்ச நடிகர்களின் சம்பளம் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறதே தவிர ஒரு பைசா குறையவில்லை. கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கும்போது அவர்கள் எதற்குக் குறைக்க வேண்டும்?

- அஜித், விகடன் இணையதளம்

ங்கிலாந்தின் புதிய பிரதமர் பற்றிய கட்டுரை பக்கா பயோடேட்டா... ஆனால், அவரால் இந்தியாவுக்கு ஏதாவது நன்மை தீமை இருக்குமா என்பதையும் எழுதியிருக்கலாம் விகடனாரே...

- ரேகா, கோயம்புத்தூர்.

கடிதங்கள்: பக்கா பயோடேட்டா!

ட்டமன்ற நூலகத்துக்கு வயது நூறு என்பது ஆச்சர்யத் தகவல். அதைவிட ஆச்சர்யத் தகவல், அந்த நூலகத்தில் நம் சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் இன்னமும் புத்தகம் எடுத்து வாசிக்கிறார்கள் என்பது...

- ச.சரவணன், திருவள்ளூர்

மைச்சர் ஜெயக்குமாரை விதவிதமான கெட்டப்புகளில் வெச்சு செஞ்சுட்டீங்களே யுவர் ஆனர்!

- ஆர்.ஜெனிபர், நாகர்கோவில்.

ய்வுக்கு ஓராண்டு அழகான நினைவஞ்சலி!

- கிருஷ்ணகுமார், துடியலூர்.

பாம்பும் ஏணியுமாக ஏறி ஏறி விளையாடுகிற பரமபத விளையாட்டு போல இறையுதிர்காடு சில நேரங்களில் சீறிப்பாய்கிறது, சிலநேரங்களில் அமானுஷ்யத்தால் பயமுறுத்துகிறது. வாவ் இந்திரா சார்!

- ராதாமணாளன், சென்னை

றையுதிர்காடு தொடரில் வந்த நீர் பற்றிய தகவல்கள் சிறப்பாகவும் அதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ள உதவும்படியும் இருந்தது.

- கார்த்திகேயன்.என், விகடன் இணையதளம்

வாராவாரம் டைட்டில் கார்டு தொடரில் நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி. ஒவ்வொரு இயக்குநரும் கடந்துவந்த பாதைகளை வாசிக்க நம்பிக்கை தருகிறது.

- வின்சென்ட் பால், பெங்களூர்.