Published:Updated:

நூலகம் தந்த பரிசு! #MyVikatan

திருக்கார்த்தியல்
News
திருக்கார்த்தியல்

'செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள்' என்ற வரியைப் படிக்கும்போது மனம் அடித்துக்கொண்டது. ஐந்து வயதிலேயே ஒரு சிறுவன் ஹாஸ்டலில் சேர்கிறான் என்றால் அவன் வாழ்க்கை எவ்வளவு வெறுமை நிறைந்ததாக இருக்குமென்று தோன்றியது.

"வாவ்" என்று வியக்க வைத்த தருணம் எது என்றால் "பட்டாம்பூச்சியின் மனித முகமாக அவனது முகம் காட்சியளித்தது" என்ற வரிகளைச் சொல்வேன். வறுமையில் வாழும் ஒரு சிறுவனது வாழ்க்கையை ரொம்ப அழகாக்கிய வரிகள் இவை.

கரூர் மாவட்ட மைய நூலகத்தின் முன்பகுதியில் "இன்று நீ என்னைத் தேடி வந்தால் நாளை உலகம் உன்னைத் தேடி வரும்" என்று எழுதி இருக்கும். நூலகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு தான் உள்ளே நுழைவேன். அன்றும் அப்படித்தான் உள்ளே நுழைந்தேன். வாசகர்கள் அமர்ந்து படிக்கும் படிப்பறைக்குச் சென்றேன். ஆனந்த விகடனை தேடினேன். வயதான ஒருவர் ஆவி இதழை வாசித்துக்கொண்டிருந்தார். அவர் படித்து முடிக்கும் வரை காத்திருக்கலாம் என்று காத்திருந்தேன். பிறகு பொறுமை இல்லாமல் இதழுக்காக அவர் அருகே சென்று அமர்ந்தேன். நான் அந்த இதழுக்காகக் காத்திருப்பதை தெரிந்துகொண்ட அந்தப் பெரியவர் "இந்தாங்க படிங்க..." என்று சொல்லிக் கொடுத்தார்.

ஆனந்த விகடனை வாங்கினாலே முதலில் சிறுகதையைப் படிப்பதுதான் என் வழக்கம். அன்றைய இதழில் "திருக்கார்த்தியல்" சிறுகதையைப் பார்த்தேன். எழுதியவர் த. ராம் என்று எழுதியிருந்தது. கதையை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு சில கதைகளைப் படித்தால் இடைஇடையே செல்போனை எடுக்கத் தோன்றும். நம்மை உள்ளிழுக்காமல் இருக்கும் அந்தச் சிறுகதை. ஆனால் திருக்கார்த்தியல் சிறுகதை எனக்கு அந்த மாதிரியான சலிப்பை தரவில்லை. வாசிக்கத் தொடங்கிய சில வரிகளிலேயே அந்தச் சிறுகதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

திருக்கார்த்தியல்
திருக்கார்த்தியல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள்' என்ற வரியைப் படிக்கும்போது மனம் அடித்துக்கொண்டது. ஐந்து வயதிலேயே ஒரு சிறுவன் ஹாஸ்டலில் சேர்கிறான் என்றால் அவன் வாழ்க்கை எவ்வளவு வெறுமை நிறைந்ததாக இருக்குமென்று தோன்றியது. அவனுடைய அம்மா அப்பாவைத் திட்டத் தோன்றியது. அடுத்ததாக வந்த "செந்தமிழின் அம்மா ஆண்டுக்கு ஒருமுறை பார்க்க வருவாள். எதுவும் வாங்கி வரமாட்டாள். அதுவும் பள்ளிக்கே வந்துவிட்டுப் போய்விடுவாள். அப்போது மட்டும் செந்தமிழின் கையில் ஒரு துண்டு மைசூர்பாக் இருக்கும்..." என்ற வரிகளில் அவனுடைய தாய் எவ்வளவு இரக்கமற்றவள் என்று புரிந்தது. எவ்வளவு பாரமான வாழ்க்கையை இந்தச் செந்தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்றுணர்ந்தபோது கண்கள் கலங்கின. தாய் இப்படி என்றால் தந்தை எப்படிபட்டவனாக இருப்பான் என்று யோசனை பிறந்தது. எழுத்தாளர் ராம் தங்கம் இந்தக் கதையில் செந்தமிழின் அப்பாவைப் பற்றியும் சில வார்த்தைகள் எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது.

"பிறந்த குழந்தையைத் தகப்பன் வாங்கும்போது வரும் கவனமும் பேரன்பும் செந்தமிழ் ஆட்டிறைச்சியை வாங்கும்போது இருந்தது. கைநிறைய அள்ளி மோந்து பார்த்தான். தலைவியின் கூந்தலை மோந்து பார்த்துக் கிறங்கிப்போகும் தலைவனைப் போல அவனது கண்கள் சொக்கின." - எவ்வளவு அருமையான உவமை. இந்த இடங்களைப் போலவே "வாவ்" என்று வியக்க வைத்த தருணம் எது என்றால் "பட்டாம்பூச்சியின் மனித முகமாக அவனது முகம் காட்சியளித்தது" என்ற வரிகளைச் சொல்வேன். வறுமையில் வாழும் ஒரு சிறுவனது வாழ்க்கையை ரொம்ப அழகாக்கிய வரிகள் இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அந்த வீடியோவைப் பார்த்தபிறகு சிறுகதையில் வந்த செந்தழும் 'கற்றது தமிழ்' படத்தில் வந்த குட்டி பிரபாகரும் ஒன்று எனத் தோன்றியது.

"அவன் கண்ணீரும் அவனோடு நடந்தது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை வருகிறது. ஆனால், செந்தமிழுக்கு இன்னும் பனை ஓலை கொழுக்கட்டை கிடைக்கவில்லை." என்ற வரிகளோடு ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதை முடிவுபெற்றது. இந்தக் கடைசி வரிகள் இந்த எழுத்தாளர் மிகப்பெரிய உயரங்களை அடைவார் என்று உணர்த்தியது. ஆனால் தன்னுடைய "திருக்கார்த்தியல்" சிறுகதை தொகுப்பு புத்தகத்திலோ "அவன் கண்ணீரும் அவனோடு நடந்தது." என்ற வரிகளோடு சிறுகதையை முடித்திருந்தார்.

திருக்கார்த்தியல் சிறுகதையை முழுவதும் படித்து முடித்ததும் கனத்து போன இதயத்துடன் கண்களை மூடி நூலகத்தில் அமர்ந்திருந்தேன். அதே மனதுடன் பேருந்தில் ஏறினேன். அன்று பேருந்தில் பயணிக்கும்போது யதேச்சையாகக் கற்றது தமிழ் படத்திலிருந்து "பற பற பட்டாம்பூச்சி..." என்ற பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலின் வீடியோவை யூடியூபில் தேடினேன். திருக்கார்த்தியல் சிறுகதையில் தனது தமிழாசிரியர் மீது அதிக பற்று கொண்டவனாக இருப்பான் கதை நாயகனான சிறுவன் செந்தமிழ். அவர்களின் (செந்தமிழ் - தமிழாசிரியர்) உறவைச் சுருக்கமாக எழுதியிருந்தார் ராம் தங்கம். அந்த வீடியோவைப் பார்த்தபிறகு சிறுகதையில் வந்த செந்தழும் கற்றது தமிழ் படத்தில் வந்த குட்டி பிரபாகரும் ஒன்று எனத் தோன்றியது. அப்போது முதல் பறபற பட்டாம்பூச்சி பாடலை எப்போது எங்கு கேட்டாலும் எனக்கு திருக்கார்த்தியல் செந்தமிழ் தான் எனக்கு நினைவுக்கு வருகிறான். அதே போல திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பில் வரும் ஒவ்வொரு சிறுவரையும் "மனித வடிவ பட்டாம்பூச்சிகள்" என்று குறிப்பிடலாம்.

திருக்கார்த்தியல்
திருக்கார்த்தியல்

பின்னாளில் "திருக்கார்த்தியல்" புத்தகம் அசோகமித்திரன் விருது, சுஜாதா விருது போன்ற விருதுகளை வென்றதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள "வெளிச்சம்" சிறுகதை கல்லூரி பாட புத்தகங்களில் பாடமாகவும் இருக்கிறது என்பது தெரிய வந்ததும் இந்தப் புத்தகம்... குறிப்பாக திருக்கார்த்தியல் சிறுகதையில் வரும் செந்தமிழ்... எழுத்தாளர் ராம் தங்கத்தை இன்னும் அதிக உயரத்துக்கு அழைத்துச் செல்வான் என்பது புரிந்தது.

ஒரு படைப்பு நம்மை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் நான், "பொறுப்புணர்வு மிக்க மனிதனாக மாற்றக்கூடியதாகப் படைப்புகள் இருக்க வேண்டும்... அதுவே சிறந்த படைப்பு" என்று நான் சொல்வேன். திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பு படித்தபின்பு வசதி இல்லாத சிறுவர் சிறுமிகள்மீது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டு அதற்கு தீர்வு எப்படி காண்பது என்பதிலும் ஆர்வமாக உள்ளேன். இந்தப் "பொறுப்புணர்வை" எங்கள் மாவட்ட மைய நூலகமும் திருக்கார்த்தியல் சிறுகதையும் எனக்கு தந்த சிறந்த பரிசாக நினைக்கிறேன்.'