Published:Updated:

முற்பகல் செய்யின் - குறுங்கதை | My Vikatan

Representational Image

நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் சார் இருந்தேன். வாங்கம்மா நான் அழைத்து செல்கிறேன் என்றார் அந்த ஆட்டோக்காரர். அவளை ஏற்றி விட்ட அடுத்த நிமிடம் ஸ்கூட்டர் வேகமெடுத்தது. ஆட்டோவும் கிளம்பியது.

Published:Updated:

முற்பகல் செய்யின் - குறுங்கதை | My Vikatan

நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் சார் இருந்தேன். வாங்கம்மா நான் அழைத்து செல்கிறேன் என்றார் அந்த ஆட்டோக்காரர். அவளை ஏற்றி விட்ட அடுத்த நிமிடம் ஸ்கூட்டர் வேகமெடுத்தது. ஆட்டோவும் கிளம்பியது.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஆட்டோ ஸ்டாண்ட் அருகே.......


உன்னுடன் வரத்தானே இன்று லீவு எடுத்து கொண்டு கிளம்பி வந்தேன் ஆபீஸ் ல இருந்து அவசர வேலை. போன் வந்து விட்டது. கொஞ்சம் adjust பண்ணிக்கோ, please.  டென்ஷன் ஆகாதே என்று அவர்  தன் மனைவியிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.

இதோ பார் . “ஓம் வல்லக்கோட்டை முருகன் துணை”. உன் இஷ்ட தெய்வ முருகன் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ. இந்த ஆட்டோ ல ஏத்தி விடுகிறேன். நீ interview முடித்துவிட்டு வெயிட் பண்ணு. நான் கரெக்டாக  மதியம் வந்து விடுகிறேன். 


ம்.. ம் .. சரி அரை மனதுடன்.  interview முக்கியமாயிற்றே….கூடவே வரேன் என்று விட்டு இப்படி   செய்தால் என்ன அர்த்தம் – கோபத்தில் சீறினாள் அவள்.


அருகே இருந்த ஆட்டோவை அழைத்தார். அந்த area-வில் பிரபலமான பள்ளியின் பெயரை சொல்லி அங்கே வர முடியுமா ?


நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் சார் இருந்தேன். வாங்கம்மா நான் அழைத்து செல்கிறேன் என்றார் அந்த ஆட்டோக்காரர். அவளை ஏற்றி விட்ட அடுத்த நிமிடம் ஸ்கூட்டர் வேகமெடுத்தது. ஆட்டோவும் கிளம்பியது.

Representational Image
Representational Image

டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களாம்மா.

ஆமாம்.செலக்ட் ஆகிவிட்டேன். இன்னைக்கு ஒரு போர்மல் மீட்டிங் அண்ட் சைனிங் தான். 


வாழ்த்துக்கள் மா….. 


நன்றி அண்ணா

கொஞ்ச நேரம் கழித்து அடடே …..பர்ஸ்  அவரிடம் அல்லவா இருக்கிறது பைலை வாங்கியவள் பர்ஸ் மறந்து விட்டேனே….. ப்ளீஸ் நிறுத்துங்க. நான் நடந்து போகிறேன்.சாரி… ஆட்டோ சார், 

அட பரவாயில்லையம்மா. நான் கொண்டு விடுகிறேன். நீங்க இங்க தான் வேலைக்கு வர போறீங்க. என்றாவது ஒரு நாள் பார்க்காமலா போய் விடுவோம். அப்போ வாங்கி கொள்கிறேன்.

Representational Image
Representational Image

எனக்கு ரொம்ப கஷ்டமா, சங்கடமாக இருக்குங்க.

ரொம்ப கவலை படாதீங்க. இக்கட்டான சூழ்நிலைதான் காரணம்.

இல்லாவிடில் “பிரசவத்திற்கு இலவசம்” போல “interview-க்கு இலவசம் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்.

அப்போ பாதி சவாரி நீங்க இலவசமாகத்தான் ஓட்ட வேண்டும். நம்ம நாட்டு நிலைமை அப்படி ..சிரித்தாள் அவள்.

சரிம்மா. டீச்சருக்கு கொடுக்கிற குருதக்ஷனை யாக இருக்கட்டும். இல்ல ஸ்கூல் – க்கு கொடுக்கிற சின்ன டொனேஷனாக இருக்கட்டும்.

உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. நான் எப்படியும் பணத்தை கொடுக்கணும்.

பேசிக்கொண்டே வந்ததில் பள்ளிக்கு வந்து விட்டார்கள்.

வந்தாச்சும்மா இறங்குங்க. எங்க வீட்டு பெண்ணாக இருந்தால் செய்ய மாட்டேனா ? எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைப்பற்றி கவலை படாதீங்க. சரியான நேரத்திற்கு போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணுங்க. போங்க போங்க …..போய் பிள்ளைகளை படிக்க வைங்க.

ரொம்ப நன்றி அண்ணா . திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே பள்ளிக்கு உள்ளே சென்றாள் அவள்.

* * * * *

முற்பகல் செய்யின் - குறுங்கதை | My Vikatan

அன்று இரவு ஆட்டோக்காரரின் வீட்டில் …….. என்னடா தம்பி ஹோம் ஒர்க் முடிச்சாச்சா. இன்னைக்கு டெஸ்ட் ஒழுங்கா எழுதினாயா என்று மகனிடம் அன்றாட விசாரணை தொடங்கியது.

அதெல்லாம் நல்லா பண்ணினேன். அப்பா.இன்னைக்கு நடந்த ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.

இன்னைக்கு ஸ்கூலுக்கு ஸ்கெட்ச் பென் செட் எடுத்துப்போக மறந்து விட்டேன். சயின்ஸ் டெஸ்டுக்கு வேணும். கையில் காசு இல்லை இன்டெர்வல் போது எதிரே அண்ணாச்சி கடையில் சொல்லி வாங்கி கொள்ளலாம் என்றால் வாட்ச்மன் வெளியே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அப்போ ஸ்கூல் எண்ட்ரன்ஸ் கிட்ட மரத்தடியில் நின்று கொண்டு இருந்த ஒரு அங்கிள் என் கிட்ட விசாரித்தார். நான் எல்லாம் சொன்னவுடன், தானே கடைக்கு சென்று ஒரு ஸ்கெட்ச் பென் செட் வாங்கி தந்தாரப்பா.

நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காம….பரவாயில்லை. எங்க வீட்டு பையனாக இருந்தால் செய்ய மாட்டேனா ? வாங்க மாட்டேனா ….. வைச்சுக்கோ என்று கொடுத்து விட்டார்.

என் மனைவி இங்குதான் டீச்சராக வரப்போறாங்க. அவங்க ஒரு ஸ்டுடென்ட்க்கு கிப்ட் பண்ணியதாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டார். நான் அவங்க பேரை கேட்டபோது கூட சொல்லாமல் சிரித்து விட்டு, என்னை கிளாஸ்சுக்கு போக சொல்லி விட்டார் .

Representational Image
Representational Image

இன்னைக்கு மாரல் சயின்ஸ் வகுப்பில் ---- மத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நம்மளால முடிந்த அளவுக்கு பலனை எதிர்பாராமல், உதவி செய்ய வேண்டும் ஏதோ ஒரு வகையில் அதற்கான பதில் யாரிடம் இருந்தாவது நமக்கு கிடைக்கும் ---- என்று மிஸ் சொன்னார்கள் . அப்போ அந்த அங்கிள் இன்னைக்கு எனக்கு செய்த உதவிக்கு பதில் / உதவி அவருக்கு கிடைக்குமா ? என்றான்.

உங்களுக்கு இந்த மாதிரி ஏதும் கிடைத்து இருக்கா ?

கட்டாயம் கிடைக்கும். கிடைத்து இருக்கு ஆட்டோ காரரின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

நாளைக்கு உங்க மாரல் சயின்ஸ் மிஸ் கிட்ட ஒரு நல்ல வாழ்க்கை பாடம் சொன்னதற்கு நன்றி சொல்லப்பா என்றார்.

* * * * *

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.