‘ஓர் அரச கதை’ என்றதும் பெரிய அரண்மனை, குதிரைகள், யானைகள், வாள் என நமது மூளை தானாக டைம் ட்ராவல் செய்யத்தொடங்கிவிடும். ஆனால் உண்மையில் அவ்வளவு எல்லாம் போகவேண்டியதில்லை, இன்றும் பிரிட்டனை ஆண்டுகொண்டிருப்பது ஓர் அரச குடும்பம்தான்.

இந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு இன்றும் மக்களிடையே அதிக மரியாதையும் மவுசும் இருக்கிறது. இந்த அரச குடும்பத்தின் தற்போதைய மகாராணி, இரண்டாம் எலிசபெத். வயது 93. இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்றைய பிரிட்டன் எப்படி இருந்தது, நவீன மாற்றங்களுக்கு நடுவே அரச குடும்ப வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதைக் காட்ட பக்கிங்ஹாம் அரண்பனைக்கு ஒரு ராயல் ட்ரிப் கூட்டிச்செல்லும் ஹை-பட்ஜெட் முயற்சியாக 2016-ல் வெளிவந்ததுதான் நெட்ஃப்ளிக்ஸின் ‘தி கிரௌன்.’

இரண்டாம் உலகப்போர் முடிந்து நவீன உலகம் நோக்கி நகரத்தொடங்கியிருந்தது பிரிட்டன். 1952-ம் ஆண்டு மன்னராக இருந்த, ஆறாம் ஜார்ஜ் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைய, ஆண் வாரிசு யாரும் இல்லாத காரணத்தால் 26-வது வயதிலேயே பிரிட்டனின் ராணியாகப் பதவியேற்கிறார் எலிசபெத்.

இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக இருக்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப்போரின் ஹீரோ என்றாலும் முதுமையால் தளரும் சர்ச்சிலிடம் குடிகொள்ளும் ஆற்றாமையும் பிடிவாதமும் ஒரு கட்டத்தில் பிரிட்டனை பாதிக்கத் தொடங்கிறது. அவரால் ஏற்படும் அரசியல் பிரச்னைகள், அரச வாழ்க்கையால் திருமண உறவில் ஏற்படும் சறுக்கல்கள், தங்கையின் காதலால் அரச குடும்பத்திற்கு வரும் பிரச்னைகள் என இவை அனைத்தையும் எலிசபெத் எப்படிக் கையாள்கிறார் என பிரிட்டன் ராணியாக அவரது ஆரம்பக்காலத்தை நமக்குக் காட்டியது தி கிரௌனின் முதல் இரண்டு சீசன்கள்.

இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது சீசன் சற்றே முதிர்ந்த எலிசபெத்தின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறது. வின்ஸ்டன் சர்ச்சில் மறைவு, ஏபர்ஃபேன் விபத்து, மவுண்ட்பேட்டனின் ஆட்சியைக் கலைக்கும் முயற்சி, அரச குடும்ப வரையறைகளுக்குள் சிக்கித்தவிக்கும் இளவரசன் சார்லஸ் என அரச குடும்பத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் எபிசோடுகளாக விரிகின்றன.

இந்த பீரியட் டிராமா தொடருக்கு கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு இணையான செலவைச் செய்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இதன் ஒரு சீசன் பட்ஜெட்டில் ஷங்கர் மூன்று படங்கள் எடுத்துவிடலாம். ஆனால் அதிரடி சண்டைக் காட்சிகள், மிரட்டும் VFX எல்லாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். அந்தக் காலத்தை அப்படியே பிரதிபலிக்க செட், மேக்-அப், காஸ்ட்யூம் என இந்தத் தொடருக்காக நெட்ஃப்ளிக்ஸ் பில் கட்டியது வேற டிபார்ட்மென்ட்களில்தான். சில காட்சிகளை நிஜ எலிசபெத்தின் அப்போதைய வீடியோக்களுக்கு அருகில் வைத்தால் வித்தியாசமே தெரியாத அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இந்தத் தொடரை உருவாக்கியவர் பிரபல திரைப்பட எழுத்தாளர் பீட்டர் மார்கன். ஏற்கெனவே எலிசபெத் ராணி பற்றி 2006-ல் வெளிவந்த ‘தி குயின்’ படத்திற்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். ‘தி கிரௌன்’, வெளிப்புறத்தில் பார்க்க வெறும் எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் போலத் தெரிந்தாலும், அவரின் வாழ்க்கை வழியே பிபிசி, கார்டியன், டெய்லி மிரர் போன்ற ஊடகங்களின் செயல்பாடு, பிரதமருக்கும் அரச குடும்பத்திற்குமான உறவு, முக்கிய அரசியல் நிகழ்வுகள், அமெரிக்காவுடனான உறவு, மக்களின் மனநிலை என மொத்த பிரிட்டனின் வரலாற்றையுமே நம்மிடம் முன்வைக்கிறது மார்கனின் எழுத்து.

இந்தத் தொடரின் முதல் இரண்டு சீசன்களில் முக்கிய பலமாக அமைந்தது இதன் நடிகர்கள்தாம். எலிசபெத் ராணியாக கிளார் ஃபாய் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்காக கோல்டன் குளோப், எம்மி என விருதுகளைக் குவித்திருந்தார் அவர். எலிசபெத்தின் வயதைச் சரியாகப் பிரதிபலிக்க இரண்டு சீசன்களுக்கு ஒருமுறை மொத்த நடிகர்களையும் மாற்றிக்கொண்டே இருப்பது திட்டம். அதன்படி இம்முறை எலிசபெத்தாக மகுடம் அணிந்திருப்பவர் ஒலிவியா கால்மேன். ஆஸ்கர் விருது பெற்றிருந்தாலும் கிளாரின் இடத்தை முழுவதுமாக இவர் நிரப்பிவிட முடியுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் இரண்டு எபிசோடுக்குள்ளாகவே கிளாரை மறக்கவைக்கிறார் ஒலிவியா. மற்ற புதிய நடிகர்களுமே கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

நடிப்பு மட்டுமல்லாமல் அனைத்து அம்சங்களிலும் கடந்த இரண்டு சீசன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது இந்த மூன்றாவது சீசன். இதுதான் இந்தத் தொடரின் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே. ஒரே இரவில் முழு சீசன்கள் பார்க்கும் பரபர பொழுதுபோக்கு சீரிஸ் ரசிகர்களுக்கான தொடர் இது இல்லை. சற்று நிதானமாகவே கதை நகரும், ஒவ்வொரு எபிசோடும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டது. இளவரசி டயானா மரணம் போன்ற அரச குடும்பத்தின் முக்கிய அத்தியாயங்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன என்பதால் அடுத்தடுத்த சீசன்களில் இந்த அரச குடும்பத்தின் கதை இன்னும் சூடுபிடிக்கும் என நம்பலாம்.