Published:Updated:

வீட்டைக் கட்டிப்பார், காதல் பண்ணிப்பார்!

கறுப்பு சிக்கிள்பெல்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு சிக்கிள்பெல்

சிறுவயதில் சைக்கிள் செயினைச் சரிசெய்வதுபோல் எதிர்வீட்டுக் காதலிக்கு சிக்னல் காட்டும் நினைவுகளோடு வாழும் நடுத்தர வயது அங்கிளோ, டேட்டிங் சைட்டில் ஹார்ட்டீன்களோடு காத்திருக்கும் 90ஸ் கிட்ஸோ உங்கள் ரொமான்ஸ் மனசுக்கு நிச்சயம் இந்த பறவைக்காதல் பிடிக்கும்.

வீட்டைக் கட்டிப்பார், காதல் பண்ணிப்பார்!

சிறுவயதில் சைக்கிள் செயினைச் சரிசெய்வதுபோல் எதிர்வீட்டுக் காதலிக்கு சிக்னல் காட்டும் நினைவுகளோடு வாழும் நடுத்தர வயது அங்கிளோ, டேட்டிங் சைட்டில் ஹார்ட்டீன்களோடு காத்திருக்கும் 90ஸ் கிட்ஸோ உங்கள் ரொமான்ஸ் மனசுக்கு நிச்சயம் இந்த பறவைக்காதல் பிடிக்கும்.

Published:Updated:
கறுப்பு சிக்கிள்பெல்
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு சிக்கிள்பெல்

நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் மாதம் வெளியாகியிருக்கும் Dancing with the birds என்னும் ஆவணப்படம், பறவைகளின் காதலையும் காதல் நிமித்தத்தையும் அவ்வளவு அழகாய்ப் பதிவு செய்கிறது.

வீட்டைக் கட்டிப்பார், காதல் பண்ணிப்பார்!

‘பேர்ட்ஸ் ஆஃப் பேரடைஸ்’ என்னும் குழுவில் இருக்கும் பறவைகளைப் பற்றிப் பதிவு செய்கிறது இந்த ஆவணப்படம். நியூ கினி காடுகளில் உணவுக்குப் பஞ்சமில்லாததால், பறவைகளின் முழு நேர வேலை காதல், காதல், காதல்...மேலும் காதல் மட்டும்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கிங் ஆஃப் சாக்ஸனி
கிங் ஆஃப் சாக்ஸனி

பெண்களைக் கவர்வதற்காகத் தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் விதவிதமாய்ப் பாடுவதையும் வினோதமாய் ஆடுவதையும் பார்த்திருக்கிறோம். பறவைகளிலும் இதே வேலையைச் செய்வது ஆண்கள்தான். உலகின் நீண்ட இறகுகளை உடைய பறவை என்றால் அது கிங் ஆஃப் சாக்ஸனிதான். சிட்டுக்குருவிபோல் இருந்தாலும், அதன் இருபக்கமும் இறகுகள் 50 செ.மீ வரை நீளும். மரக்கிளையில் அமர்ந்து ஊசலாடிக்கொண்டே இருக்கும். அதேநேரம் இறகுகளையும் அழகியலுடன் ஆட்ட வேண்டும். பெண் பறவைகளின் வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே. எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் பறந்து சென்றால், கூட்டுக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்று அர்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் நெருங்கிய நண்பன் சற்று சுமார்மூஞ்சி குமாராக இருந்தாலும், அவனுக்கு என்றொரு ரொமான்டிக் லுக்கிருக்கும். கறுப்பு சிக்கிள்பெல் அப்படியானதொரு பறவை. ‘காதலின் தீபம் ஒன்று’ என்று கூவும்போது மட்டும் அதன் நீளம் வேறு மாதிரி. இறகுகளை மொத்தமாய் விரித்துத் தன்னை ஒரு படகாக்கி `நாங்கெல்லாம் காதல்ல சூப்பர் சீனியர்’ என்கின்றன. அப்படியும் ஜோடி சேரவில்லை வரவில்லை என்றால் நார்மல் மோடுக்குச் சென்றுவிடுகின்றன.

ஃபிளேம்
ஃபிளேம்

ஆனால், இந்த ஆடலும் பாடலும் தாண்டி சில பெண்பறவைகள் எதிர்பார்ப்பது வீடு. காட்டில் ஒரு சொந்தக் குடில். மேக்கிரகர் என்னும் பறவைக்கு சிக்கிள்பெல் போல் தன்னை அழகாகக் காட்ட முடியாது. ஆடவும் தெரியாது. நீண்ட அலகுகள் இல்லை. சற்றே சுமாரான, ‘பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ பறவை. ஆனால், அதன் உழைப்பின் முன் அண்ணாமலை, படையப்பா ரஜினிகளே தோற்றுவிடுவார்கள். மேக்கிரகர் உருவாக்குவது 1 மீட்டர் உயரமுள்ள ஒரு சொகுசுக் கட்டில். குச்சிகளினாலான இந்த வீட்டைக் கட்ட ஏழாண்டுகள் எடுத்துக்கொள்ளுமாம். கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கும் ஜிங்கிள்பெல் போல் அந்தக் குச்சி வீட்டின் மருங்குகளில் காய்ந்த பூக்கள், சருகுகளைத் தொங்க விடும்.

கரோலா பரோட்டியா
கரோலா பரோட்டியா

பன்றிகளில் ஆரம்பித்து அனைத்துப் பறவைகளும் இதைச் சிதைக்கப்போராடுவார்கள். சில பறவைகள் கீழிருந்து சில குச்சிகளைப் பிடுங்கிவிடும். பன்றிகளை விரட்ட மேக்கிரகர் எடுப்பது மிமிக்ரி அவதாரம். நாய்களைப்போல குரைக்க ஆரம்பிக்க, வெடிவைத்ததைப்போல பன்றிகள் ஓடிவிடும். ‘வீட்டைக் கட்டிப்பார்; காதல் பண்ணிப்பார்’ புதுமொழி மேக்கிரகருக்குப் பிடிக்கும்.

ஆங்கிரி பேர்ட்ஸ் திரைப்படங்களில் வருவதுபோல் அச்சு அசல் இருக்கும் பறவை ஃபிளேம். மேக்கிரகர் அளவுக்குப் பெரிய வீடெல்லாம் இல்லை. குடிசைதான். ஆனால், நடனத்திலும் அழகிலும் அப்ளாஸ் அள்ளுவது ஃபிளேம்.

கறுப்பு சிக்கிள்பெல்
கறுப்பு சிக்கிள்பெல்

திரைப்படத்துக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ஒத்திகை அவசியம். கரோலஸ் பரோட்டியாவின் ஒத்திகைக்கு முன் கமல்ஹாசனே தோற்றுவிடுவார். முதலில் இலைதழைகளுடன் ஒரு சமதரையை உருவாக்குகிறது. ஒன்பது நடன அசைவுகளை இணையின் முன் ஆடுவதுதான் வாழ்நாள் இலக்கு. அதற்காக ஒத்திகை செய்வதுதான் அதன் வாழ்நாள் வேலை. நடன அசைவுகளை எக்காரணத்தை க்கொண்டும் மாற்றுவதெல்லாம் இல்லை. ஒரு நடன அசைவுக்கும் அடுத்த நடன அசைவுக்கும் எடுத்துக்கொள்ளும் நேர இடைப்பொழுதில் அவ்வளவு நுணுக்கம். ஆடி முடித்து பரோட்டியா ஓக்கேவா எனக் கேட்பதும், பெண் பறவை இறகசைப்பதும் காதல் வைபோகங்கள்.

ஸ்டீபன் ஃப்ரையின் குரலில் 51 நிமிடங்களே வரும் இந்த ஆவணப்படம் ‘டோன்ட் மிஸ்’ வகை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism