சினிமா
Published:Updated:

“எழுதுவதற்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் இவை!”

முருகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகேஷ்

முருகேஷுக்கு, 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

“என்னுடைய சிறார் படைப்பிலக்கியங்கள் நேரடிக் கதைகளாக எழுதப்படுறதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், குழந்தைகளுக்கு முதலில் அவற்றைக் கதைகளாகச் சொல்லுவேன். அவர்களுக்குப் பிடித்த கதைகளை, அவர்கள் சொன்ன திருத்தங்களோடு பிறகு கதையா எழுதுவேன். நான் எழுதும் சிறார் இலக்கியக் கதைகள் இப்படித்தான் குழந்தைகளின் பங்களிப்போடு உருவாகின்றன...’’ இயல்பாகப் பேசுகிறார் மு.முருகேஷ்.

“எழுதுவதற்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் இவை!”

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக முருகேஷுக்கு, 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்தப் புத்தகத்தில் ஆமை-முயல் கதை, பாட்டி வடை சுட்ட கதை, ஏகலைவன் கதைன்னு காலங்காலமா குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டு வர்ற கதைகளுக்குப் புதுவடிவம் கொடுத்திருக்கேன். ஆமையும், முயலும் அதனதன் தன்மையில முன்னேறிச் செல்றாங்க, பாட்டிக்குச் சுள்ளி பொறுக்கிக் கொடுத்த காக்காவுக்குக் கூலியா வடை கிடைக்குதுன்னு கதைகளை மறுவாசிப்பு செய்திருக்கேன். தேவ கோட்டை தே. பிரிட்டோ பள்ளி மாணவர்கள் இந்தக் கதைகளுக்கு ஓவியம் வரைஞ்சு சிறப்பு சேர்த்திருக்காங்க. அப்படிப்பட்ட இந்தத் தொகுப்புக்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்திருக்கு.” முருகேஷின் முகம் புன்னகையால் நிறைகிறது.

எண்பதுகளில் எழுதத் தொடங்கிய முருகேஷ் சிறார் இலக்கியம் சார்ந்து இயங்கத் தொடங்கியது குறித்துப் பேசும் போது, “தொண்ணூறுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் இணைந்து வேலை பார்த்தேன். புதிய கற்போர்களிடம் என்னுடைய படைப்புகளை வாசிக்கக் கொடுத்தபோது, அவங்க சிரமப்பட்டாங்க. மக்களுக்காக எழுதுவதாக நினைத்தோம், மக்கள் இதைப் படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்களேன்னு எளிமையாக எழுதத் தொடங்கி னேன். குழந்தைகளுக்கும் இதுமாதிரியான எழுத்துகள்தான் பிடிக்குதுன்னு நாளடைவில் தெரியவந்தது. மொழிநடையில் கூடுதல் கவனம் கொண்டு கடந்த முப்பது ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியத்தில் ஈடுபட்டு வருகிறேன். கதை, கவிதை, பாடல்கள், ஆக்டிவிட்டி புக்ஸ்னு எல்லா வடிவம் சார்ந்தும் சிறார் இலக்கியத்துல இதுவரை 20 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்” என்கிறார்.

“எழுதுவதற்கு முன்பு சொல்லப்பட்ட கதைகள் இவை!”

“தமிழ்ல சிறார் இலக்கி யத்துக்குப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சிறார் எழுத் தாளர்கள் தாண்டி, சிறார்களே இலக்கியம் படைக்கும் சூழல் சமீபத்திய ஆண்டுகளில் தமிழில் உருவாகியிருப்பது ஆரோக்யமான போக்கு!” முருகேஷின் வார்த்தைகளில் நம்பிக்கை நிறைகிறது.