அதுலாபுரம் கௌதம் என்பவர் ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவில் விலங்குகள் உரிமை ஆர்வலராக உள்ளார். இவர் தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்திலுள்ள திகுல் கிராமத்தில் தெரு நாய்களை கிராம பஞ்சாயத்து செயலாளர் மற்றும் தலைவர் கொன்றதாக வழக்கு பதிவு செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்பகுதியில் நாய்கள் அதிகமாக உள்ளதால் நாய் பிடிப்பவர்களை இதற்கென நியமித்து, தெரு நாய்களுக்கு விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒருவரின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டுள்ளது. அவர் ஃபவுண்டேஷனில் அளித்த புகாரின் பேரில் அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கிராமத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அங்கு மக்களின் உபயோகமில்லாமல் இருந்த கிணறுகளில் கொல்லப்பட்ட நாய்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறித்து சித்திப்பேட்டை கலெக்டர் மற்றும் சித்திப்பேட்டை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததோடு கொலைக்கு காரணமான இருவரையும் சஸ்பெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை புகாரின் அடிப்படையில் பதிவுசெய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.