Published:Updated:

உயிர் போராட்டத்தில் யானை தாக்கிய சிறுவன்... பீதியில் மக்கள்!

உயிர் போராட்டத்தில் யானை தாக்கிய சிறுவன்... பீதியில் மக்கள்!
உயிர் போராட்டத்தில் யானை தாக்கிய சிறுவன்... பீதியில் மக்கள்!
உயிர் போராட்டத்தில் யானை தாக்கிய சிறுவன்... பீதியில் மக்கள்!

கிருஷ்ணகிரி: யானை தாக்கியதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அதே வேளையில் இன்னொரு பெண்ணும் காயமடைந்திருக்கிறார். யானைகள் அட்டகாசத்தால் தற்போது அந்த ஊர் மக்களே பீதியில் உறைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் வனப்பகுதி அதிகம். இங்கே வறட்சி காலத்தில் அடிக்கடி யானைகள் விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் நுழைந்து விடும். அதேபோன்று இன்று அதிகாலையிலும் மூன்று யானைகள் ராயக்கோட்டை பகுதியில் சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறது.

இதை அறியாத அப்பகுதி மக்கள் வழக்கம்போல் காலைக்கடனுக்காக ஒதுக்குப்புறமான இடங்களைத் தேடி சென்றுள்ளனர். கோட்டைத்தெருவைச் சேர்ந்த ராமன் மகன் தினேஷ் என்ற சிறுவன் தன் நண்பர்கள் இருவருடன் சென்றிருக்கிறான். வழியில் திடீரென வெளிப்பட்ட யானைகள் மூன்று சிறுவர்களையும் விரட்ட... அவர்கள் திசைக்கொருவராக ஓடியிருக்கின்றனர்.

##~~##
இருப்பினும் தினேஷை ஒரு யானை தொடர்ந்து விரட்டிவர, ஓட முடியாமல் அந்த சிறுவன் தடுமாறி விழுந்திருக்கிறான். அவனை அந்த யானை மிதித்து தூக்கி வீசியதில் வயிறு கிழிந்து குடல் முழுவதும் வெளியில் வந்துவிட்டது. ஆபத்தான நிலையில் இருந்த தினேஷுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தற்போது பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
இதுதவிர ராயக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் இந்த யானைகள் தாக்கியதில் அவரும் காயமுற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போதிய தீவனமின்றி அடிக்கடி கிராமங்களுக்குள் நுழையும் யானைகளால் உயிர்ச்சேதங்களும், தாக்குதல்களும் சமீப காலமாக இப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளையும் பீதியுடன் கழித்து வருகின்றனர்.
-எஸ்.ராஜாசெல்லம்