Published:Updated:

கான மயில் வாழ...

கான மயில் வாழ...
பிரீமியம் ஸ்டோரி
கான மயில் வாழ...

கான மயில் வாழ...

கான மயில் வாழ...

கான மயில் வாழ...

Published:Updated:
கான மயில் வாழ...
பிரீமியம் ஸ்டோரி
கான மயில் வாழ...

ள்ளே நுழைந்து சில நூறு மீட்டர்களே சென்றிருப்பேன். அதற்குள்ளாகவே அதைப் பார்த்துவிட்டேன். அதுவும் நூற்றைம்பது மீட்டர்கள் தூரத்திலேயே. அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பறவைதான் இந்தக் கான மயில். அதை இவ்வளவு அருகில் பார்ப்பேனென்று கற்பனைகூடச் செய்யவில்லை. அதைப் பார்க்கத்தானே ஆரவல்லி மலைத்தொடருக்குச் சென்றிருந்தவன் இருபது மணிநேர ரயில் பயணத்தில் தார் பாலைவனத்துக்கு, பாகிஸ்தானின் எல்லையில் அமைந்திருக்கும் ஜெய்சல்மருக்கு வந்து சேர்ந்தேன். ஒருகாலத்தில் தமிழகம் முழுக்கப் பரவலாக வாழ்ந்துகொண்டிருந்தன கான மயில்கள். மூன்றரை அடி உயரம்வரை வளரும் நாட்டின் உயரமான பறவை கானமயில். உச்சந்தலையில் தொடங்கும் கறுப்பு நிறம் கண்களுக்கு மேலேயே நின்றுவிட்டால் பெண் கானமயில். அதுவே கண்களின் பாதிவரை வந்தால் ஆண் கானமயில்.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி”


என்கிறது மூதுரை. இங்கு ஔவையார் பேசியிருப்பது தோகை விரித்தாடும் மயில் குறித்தல்ல. ‘கானல் மயில்’ என்றழைக்கப்பட்ட கான மயில் பற்றித்தான். இனப்பெருக்க காலங்களில் ஆண் கான மயில் தன் உடலின் முன்பகுதியில் இறகுகளை விரித்து நின்று இணையை ஈர்க்கப் பாடும். அதையே அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இப்படிப் பேசப்பட்ட பறவைகளைத் தற்போது எங்குமே காணவில்லை. தமிழகத்தில் கடைசியாக 1970 வாக்கில் விமானி ஒருவரால் சூலூரில் ஒரு கான மயில் பார்க்கப்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற இடங்களில் மட்டுமே அவை தற்போது வாழ்கின்றன. அதிலும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் ராஜஸ்தானின் ஒரு பகுதியில்தான் அதிகமாக வாழ்கின்றன. நாட்டில் இப்போதிருக்கும் மொத்தக் கான மயில்களின் எண்ணிக்கை சுமார் 160. அதில் இரண்டில் ஒரு பங்கு ராஜஸ்தானில் வாழ்கின்றன. மற்ற பறவைகள் குஜராத், கர்நாடகா, ஆந்திரா என்று ஆங்காங்கே மிகச் சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றன. இல்லை, தம் இனத்தின் இருப்பைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டி ருக்கின்றன. நாட்டின் தேசியப் பறவையாக நிர்ணயிப்பதற்கு மயிலோடு கான மயிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இதன் பெயர் தி கிரேட் இந்தியன் பஸ்டர்டு (The Great Indian Bustard). இறுதி வார்த்தையின் உச்சரிப்பு சிறிது தவறினாலும் ஆங்கிலக் கெட்ட வார்த்தையாக மாறிவிடும் என்ற ஒரே காரணத்தாலேயே கான மயிலைத் தவிர்த்து மயிலைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கான மயில் வாழ...

வேட்டை, வாழிட ஆக்கிரமிப்பு என்று பல்வேறு சிக்கல்களை இவற்றின் அழிவுநிலைக்குக் காரணமாகச் சொல்லலாம். கான மயில்களுக்கு நேர்ப்பார்வை கிடையாது. அதன் கண்கள் பக்கவாட்டில் அமைந்திருக்கும். விலங்குகளின் வேட்டைக்கு இரையாகும் வாய்ப்பு இருந்ததால், அவை வருவதை உணர இந்த மாதிரியான பார்வை அமைப்பை அவை பெற்றுள்ளன. அவ்வளவு பெரிய உடலைத் தூக்கிக்கொண்டு இவற்றால் மிக உயரமாகப் பறக்க இயலாது. குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் கான மயில்கள் நாம் நிறுவியிருக்கும் மின் கம்பிகளில் சிக்கி அடிபட்டு இறக்கின்றன.

இந்தப் பிரச்னை குறித்துத் தெரிந்துகொள்ள கான மயில்களை ஆய்வுசெய்யும் முனைவர். மோஹிப் உத்தீன், ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, 80 கிலோமீட்டர் நீளமான மின் கம்பிகளில் ஆண்டுக்கு முப்பது வகைகளைச் சேர்ந்த 289 பறவைகள் இறப்பதை உறுதிசெய்தார். தேசியப் பூங்காவைச் சுற்றி 4,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சம் பறவைகள் இறக்கின்றன. அதில் ஆண்டுக்கு நான்கு கான மயில்கள் இறக்கின்றன. `சம்’ என்ற கிராமத்திலிருந்து பொக்ரான் என்ற பகுதி வரை கான மயில்களின் வாழிடம் பரவியிருக்கிறது. சம் முழுவதும் முடிந்தமட்டும் மோஹிப் மற்றும் அவரது குழு பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், அங்கிருந்து பொக்ரானுக்கு அவை மாறி மாறிப் பறக்கின்றன. அப்படிப் பறந்து திரியும் இடம் முழுவதையும் தற்போது தேசியப் பூங்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாலும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மின்கம்பிகள் நீக்கப்படவே இல்லை. இதனால் அவை இத்தகைய சிக்கல்களை இன்னமும் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றன. இதைச் சரிசெய்ய மோஹிப்பும் அவரது குழுவும் ஓர் வழிமுறையைக் கண்டு பிடித்தனர். மின்கம்பிகளில் பத்து மீட்டர் இடைவெளிகளில் சிவப்பு நிறத்தில் திசை மாற்றிகளை அமைக்க வேண்டும். பட்டையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அவை ரேடியம்போல மின்னிக் கொண்டிருக்கும். அதன்மூலம் கான மயில்களும் மற்ற பறவைகளும் அதில் சிக்காமல் சுதாரித்துக்கொள்ளலாம். இதை ஆய்வுக்குட்படுத்தி நிரூபித்துவிட்டனர். திசைமாற்றிகளைப் பொருத்த ஒரு கிலோமீட்டருக்கு 8.75 லட்சம் செலவாகும். அதற்கான திட்ட முன்மொழிதலையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்து (WII) இந்திய வனவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மோஹிப்பைச் சந்தித்துப் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கான மயில் வாழ...

“மின்கம்பிகள் மட்டு மல்லாமல், அதிகமாகிவரும் தெருநாய்களாலும் கான மயில்களுக்கு ஆபத்துள்ளது. அவை வேட்டையாடும் அபாயங்களைக் களையவும் திட்டமிட்டுக் கொண்டி ருக்கிறோம். கூடிய விரைவில் கானமயில்களைக் காப்பிடத்தில் வைத்து இனப்பெருக்கம் செய்ய வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.

கான மயில் வாழ...

ஆய்வு நடவடிக்கைகளோடு நின்றுவிடாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் அவர்களே மேற்கொள்கிறார்கள். விழிப்புணர்வு நடவடிக்கை களைக் கவனித்துவரும் தன்யா குப்தாவைச் சந்தித்துப் பேசினோம், “உள்ளூர் மக்களும் இங்கு வாழும் பழங்குடிச் சமூகங்களும்தாம் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கையின் மிக முக்கியப் பங்குதாரர்கள். பள்ளிகளில், கிராமங்களில் துண்டறிக்கைகள் விநியோகிப்பது, பேசுவது, போட்டிகள் நடத்துவது ஆகியவை   மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தேசியப் பூங்காக்களுக்குள் வாழும் கிராம மக்களுக்குக் கான மயில் பற்றி, மின் கம்பிகளால் அவை சந்திக்கும் சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்துப் புரிய வைக்கிறோம்” என்கிறார்.

கான மயில் வாழ...

இந்தியாவிலேயே உயரமான பறவை இந்தக் கான மயில். இந்தப் பறவைகள் இந்தியாவின் கௌரவம். நம் கௌரவத்தைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மேற் கொண்டவாறு அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி ஒன்று மட்டுமே. நம் நிலப் பரப்பில் கான மயில்களுக்கு வாழிடமாக அமையும் புல்வெளிக் காடுகளைப் பாதுகாப்போம். இங்கு இன்னும் பல பறவைகள் அந்நிலத்தைச் சார்ந்தி ருக்கின்றன. அவ்வுயிரினங் களைப் பாதுகாத்துக் கான மயிலுக்காகக் காத்திருப்போம்.

- சுபகுணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism