Published:Updated:

ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!
ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!

கடந்த ஜூன் மூன்றாம் தேதி, பைப்பிங் ப்ளோவர் என்ற பறவை அந்தக் கடற்கரைப் பகுதியில் கூடுகட்டி முட்டையிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே அந்தப் பறவைக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்பொருட்டு, கோடைக்காலம் முடியும்வரை இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து நேஷனல் பார்க் சர்வீஸ் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

`இயற்கை, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது' என்ற கருத்தை வெளிப்படுத்தும் இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்சி மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சான்டிஹூக்/கேட்வே நேஷனல் ரெக்கரேஷன் ஏரியா என்ற கடற்கரை, பொழுதுபோக்குக்கேற்ற தீவுப்பகுதி. இங்கு ஒவ்வொரு புதன்கிழமை இரவும் கோடைக்கால இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இலவச அனுமதியுடன் நடைபெறும் அந்த நிகழ்ச்சியின்போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். கடந்த ஜூன் 3-ம் தேதி, பைப்பிங் பிளோவர் என்ற பறவை அந்தக் கடற்கரைப் பகுதியில் கூடுகட்டி முட்டையிட்டிருப்பது தெரியவந்தது. உடனே அந்தப் பறவைக்குப் பாதுகாப்பை அளிக்கும்வகையில், கோடைக்காலம் முடியும் வரை இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்துசெய்து நேஷனல் பார்க் சர்வீஸ் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. இது, அங்கு உள்ள இசை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தாலும், அந்தப் பறவையின் நலனுக்காக ஏற்றுக்கொண்டனர்.

அந்தப் பறவையிடம் அப்படியென்ன விசேஷம்?

ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!

பைப்பிங் பிளோவர் என்பது, அட்லான்டிக் கடலில் நியூஜெர்சி கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே அரிதாகக் காணப்படும் பறவையினம். இதில் 3,000 ஜோடிகள் மட்டுமே தற்போது உயிர்வாழ்கின்றன. எனவே, அவை முட்டையிட்டு அடைக்காக்கும் பருவங்களில் மனிதர்களால் இவற்றுக்கு எந்தத் தொந்தரவும் எழாத வகையில், அவை வசிக்கும் பகுதிகளைச் சுற்றி சுமார் 1,000 மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குஞ்சு பொரிக்க ஒரு மாதம், வளர ஒரு மாதம் என இரண்டு மாதகாலமும் அவற்றுக்கு பாதுகாப்பான சூழல் தேவை. அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆர்வலர்களும் அதிக அக்கறையுடன் அதைக் கவனித்துவருகிறார்கள். இந்தப் பறவையினத்தைப் பாதுகாக்கும்பொருட்டு, சான்டிஹூக் கடற்கரைப் பகுதியில் மது அருந்த ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!
ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!

இதுகுறித்து, பறவை ஆர்வலரும் ஆய்வாளருமான அமிர்தராஜிடம் கேட்டபோது,

``பறவைகள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், மேற்கத்திய நாடுகள் மிகுந்த ஆர்வம்காட்டுகின்றன. இந்த பைப்பிங் பிளோவர், அழிவின் விளிம்பிலுள்ள பறவையினம். அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் வசிக்கக்கூடிய இது, முட்டையிடும் காலத்தில் மட்டும் கடற்கரைப் பகுதிக்கு வரும். கடற்கரை மணலில், கூழாங்கற்கள் நிறைந்த பகுதியில் குறைந்தபட்சம் நான்கு முட்டைகள் வரை இடும். பெரும்பாலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்குள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, வளர்ந்தவுடன் வேறு இடம் நோக்கிப் பறந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு, ஒரேயொரு பறவை மட்டும் சற்று தாமதமாக முட்டையிட்டு அடைகாக்கத் தொடங்கியிருக்கிறது. பைப்பிங் பிளோவர் பறவைக்காக, இசை நிகழ்ச்சிகளை ரத்துசெய்துள்ளார்கள்.

இதேபோல டெக்ஸாஸிலும் மூன்று மாதங்களுக்கு முன்னர் பார்க்கிங் ஏரியாவில் முட்டை பொரித்திருக்கிறது. உடனே அங்கு வேறு யாரும் நுழையாதபடி ஒரு மாத காலத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இப்படி ஒரு பறவையினத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க அரசாங்கமே நடவடிக்கை எடுப்பதைப் பார்க்க முடிகிறது.

நம் சென்னையிலும் கடல் ஆமைகளுக்காக இதே போன்ற ஒரு பணி நடக்கிறது. கடல் ஆமைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக மட்டுமே கடற்கரைக்கு வருகின்றன. இவை, ஒடிசா முதல் சென்னை வரை உள்ள கடற்கரையின் குறிப்பிட்ட பகுதிகளில் முட்டையிடும் வழக்கமுள்ளவை. சென்னையில் அடையாறு, திருவான்மியூர் கடற்கரையில் கிட்டத்தட்ட 200 முட்டைகள் வரை மண்ணுக்குள் புதைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. 27 நாள்கணக்கில் அவை பொரித்து குஞ்சுகளாக வெளிவந்து கடலுக்குள் சென்றுவிடும். இவற்றில் 90 சதவிகிதம் காகம், நாய் முதலானவற்றால் பலியாகிவிடுகிறது. எனவே, சென்னையைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ நிறுவனங்கள், இந்த முட்டைகளைச் சேகரித்து ஒரே இடத்தில் குஞ்சு பொரிக்கச் செய்து அவற்றை பாதுகாப்பாகக் கடலில் சேர்க்கும் பணியை, சுமார் பத்து ஆண்டுக்காலமாகச் செய்துவருகின்றன.

ஒரேயொரு பறவைக்காக இசை நிகழ்ச்சிகள் ரத்து!

ஆனால், நம் இந்திய அரசுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறையோ விழிப்புணர்வோ பெரிதுமில்லை. இயற்கை வளமிக்க இந்தியக் காட்டுப் பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறை முன்னர் அனுமதி மறுத்திருந்தது. ஆனால், `கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே 349 சுரங்கப் பணிக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை மேலும் துரிதப்படுத்துவேன்' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரகாஷ் ஜவடேகர் கூறினார். அமைச்சரின் இந்த நடவடிக்கை, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியதே'' என்றார்,

முதல் வரியில் குறிப்பிட்ட, `இயற்கை, அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது' என்ற கருத்தை மீண்டும் நாம் நினைவில்கொள்ளவேண்டிய தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு