Published:Updated:

49 செ.மீ நீளமான காது.. விநோத ஆட்டுக்குட்டி! இதன் சிறப்புகள் என்ன தெரியுமா?

சிம்பா: ஆட்டுக்குட்டி ( twitter|@SayedRahimUlla8 )

தனித்துவமிக்க சிம்பா தன்னுடைய நீண்ட காதுகளுக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆட்டின் உரிமையாளர் நரேஜோ.

49 செ.மீ நீளமான காது.. விநோத ஆட்டுக்குட்டி! இதன் சிறப்புகள் என்ன தெரியுமா?

தனித்துவமிக்க சிம்பா தன்னுடைய நீண்ட காதுகளுக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆட்டின் உரிமையாளர் நரேஜோ.

Published:Updated:
சிம்பா: ஆட்டுக்குட்டி ( twitter|@SayedRahimUlla8 )

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஆடுகளை வளர்ப்பதில் மிகவும் பிரபலம். உலகிலேயே அதிக ஆடுகளை உற்பத்தி செய்யும் இடங்களில் மூன்றாவதாக இந்த இடம் இருந்து வருகிறது. இப்பகுதியில், பல வகை ஆடுகள் வளர்க்கப்பட்டாலும், கமோரி வகை ஆடுகள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. சில ஆடுகள் இறைச்சிக்காகவும், சில ஆடுகள் பாலுக்காகவும் இப்பகுதியில் வளர்க்கப்படுகிறது. ஆனால் நுபியன் வகை ஆடுகள் உயர்தர பாலுக்காகவும், பால் உற்பத்திக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண ஆடுகளை ஒப்பிடுகையில் நுபியன் வகை ஆடுகளுக்கு காதுகள் சற்று நீளமாக இருக்கும். வெயில் காலத்தின் போது அதிக வெப்பம் தாக்காதவாறும், குளிர் காலத்தின் போது அதிக குளிர் வாட்டாதவாறும் ஆடுகளைக் காக்க இதன் காதுகள் உதவுகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் பிறந்த ஆட்டுக்குட்டியின் காதுகள் வழக்கத்திற்கு மாறாக 19 இன்ச் நீளத்தில் (46 சென்டி மீட்டர்) இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிம்பா என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த பெண் ஆட்டு குட்டி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜூன் 5ம் தேதி பிறந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நீண்ட காதோடு பிறந்த இந்த ஆட்டு குட்டியைக் கண்ட அதன் உரிமையாளர் முஹம்மது ஹாசன் நரேஜோ அதனை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார். நீண்ட காதுகளோடு சிம்பா பிறந்த செய்தி அக்கம் பக்கத்தினருக்கு பரவ, அந்த பகுதியில் சிம்பா பிரபலமடைந்தது.

ஆட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டி
twitter|@SayedRahimUlla8

சிம்பாவின் குறும்பு தன வீடியோக்கள் வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்தது. சிம்பா நடக்கும் போது அதன் காதுகள், தரையில் தேயும் அளவிற்கு உள்ளது. நடக்கும் போதும் குதிக்கும் போதும் காற்றில் அலை அலையாய் அதன் காதுகள் ஆடும் காட்சி இணையத்தில் வைரலானது. இப்படி வழக்கத்துக்கு மாறாக நீண்ட காதுகளோடு சிம்பா பிறந்ததற்கு மரபு குறைபாடு காரணமாக கருதப்படுகிறது.

இருந்தபோதிலும், தனித்துவமிக்க சிம்பா தன்னுடைய நீண்ட காதுகளுக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆட்டின் உரிமையாளர் நரேஜோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism