Published:Updated:

500 வகை வண்ண மீன்கள்... அசத்தும் கொளத்தூர் மீன் பண்ணைகள்!

சே. பாலாஜி

மீன்கள் வளர்க்க தொட்டிகள், கற்கள், அலங்காரப் பொருள்கள் என வளர்ப்பவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மார்க்கெட் அமைந்திருக்கிறது.

fishes
fishes

கொளத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள ரெட்டேரி, விநாயகபுரம், லட்சுமிபுரம் மற்றும் மாதவரம் போன்ற பகுதிகளில் மொத்தம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மீன் வளர்ப்புப் பண்ணைகள் இயங்கிவருகின்றன. இந்தப் பண்ணைகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்படும் மீன்கள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கும், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் கிடைக்காத பல வகை வளர்ப்பு மீன்கள் இங்கு கிடைக்கின்றன. இதுதவிர, சென்னையில் உள்ள வளர்ப்பு மீன் விற்பனையாளர்களும் இங்கிருந்தே விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் வளர்க்கப்படும் மீன்கள் மொத்தமாக கொளத்தூர் சிக்னல் அருகே விற்பனைக்கு வருகின்றன. ஏறக்குறைய 150 விற்பனைக் கடைகள் காணப்படுகின்றன.

fishes
fishes

அரோனா, பிளவர்ஹார்ன், கோல்டு பிஷ், ஷார்க், ஏஞ்சல் பிஷ் என ஐநூறு வகைகள் இங்கு கிடைக்கின்றன. 5 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரையிலான மீன்கள் இங்கு கிடைக்கின்றன. இந்தச் சந்தையின் சிறப்பாக இங்கு வரும் மக்கள் ``இங்கு இல்லாத மீன்களைக்கூட ஆர்டரின் பேரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொடுக்கிறார்கள்" என்கின்றனர். மொத்த விற்பனை மட்டுமில்லாமல் சில்லறை விற்பனையும் இங்கு நடப்பதால் இந்த மார்க்கெட்டை தேடிவருவோர் எண்ணிக்கை ஏராளம்.

மீன்கள் வளர்க்க தொட்டிகள், கற்கள், அலங்காரப் பொருள்கள் என வளர்ப்பவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் இந்த மார்க்கெட் அமைந்திருக்கிறது. வெறும் வண்ண மீன்கள் மட்டும்தானா என்றால் இல்லை கிளி, கோழி, புறா, முயல் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வண்ண மீன்கள் வளர்ப்பில் ஆர்வமுடையவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த இடம் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.