Published:Updated:

``இனி வனவிலங்குகளை தத்தெடுக்கலாம்'' டெல்லி உயிரியல் பூங்காவின் புதிய திட்டம் என்ன?

புலி

தத்தெடுப்பதற்கான விலையானது, சிங்கம், புலி, காண்டாமிருகம் மற்றும் யானைக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாயும், சிறுத்தைகளுக்கு 3,60,000 ரூபாயாகவும் இருக்கும்.

``இனி வனவிலங்குகளை தத்தெடுக்கலாம்'' டெல்லி உயிரியல் பூங்காவின் புதிய திட்டம் என்ன?

தத்தெடுப்பதற்கான விலையானது, சிங்கம், புலி, காண்டாமிருகம் மற்றும் யானைக்கு ஆண்டுக்கு 6 லட்ச ரூபாயும், சிறுத்தைகளுக்கு 3,60,000 ரூபாயாகவும் இருக்கும்.

Published:Updated:
புலி

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளை மக்கள் தத்தெடுத்து வளர்ப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், வன உயிரினங்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசோ, உயிரியல் பூங்காவோதான் பார்த்துக்கொள்ளும்.

வனவிலங்கு
வனவிலங்கு
pixabay

இந்நிலையில் வன உயிரிகளைப் பராமரிக்கும் பொறுப்பில், மக்களும் தங்களின் பங்களிப்பை ஆற்றும் வகையில் டெல்லி உயிரியல் பூங்கா புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின்படி வனவிலங்குகளைத் தத்தெடுக்கவும், இவ்வுயிரிகளின் பராமரிப்புக்குப் பணம் செலுத்தவும் மக்களால் இயலும். இத்தகைய திட்டம் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

டெல்லி உயிரியல் பூங்காவில் புலி, பறவைகள், பாம்புகள், யானைகள் என ஊர்வன பறப்பனவற்றையும் சேர்த்து 1,100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளன. மக்கள் வனவிலங்குகளைத் தத்தெடுப்பதற்கான விலையானது அந்த இனத்தின் வகையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். அதாவது, தத்தெடுப்பதற்கான விலையானது புட்கிரிகர் பறவைக்கு ஆண்டுக்கு 700 ரூபாயும், சிங்கம், புலி, காண்டாமிருகம் மற்றும் யானைக்கு ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாயும், சிறுத்தைகளுக்கு 3,60,000 ரூபாயாகவும் இருக்கும்.

சாம்பர் மான், சதுப்புநில மான் போன்றவற்றைத் தத்தெடுக்க ஆண்டுக்கு 40,000 ரூபாயும், இந்திய ஓநாய்களுக்கு ஆண்டுக்கு 1,80,000 ரூபாயும் மற்றும் இந்திய காட்டெருதுகளுக்கு ஆண்டுக்கு 2,25,000 ரூபாயும் பெறப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தத்தெடுப்புக்கான கட்டணங்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

``இனி வனவிலங்குகளை தத்தெடுக்கலாம்'' டெல்லி உயிரியல் பூங்காவின் புதிய திட்டம் என்ன?
pixabay

இந்தத் தத்தெடுப்புக்கான கால அளவு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். தத்தெடுப்பவர்கள் திட்டத்திலிருந்து எப்போது வேண்டுமென்றாலும், விலகிக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் பணம் திரும்பக் கொடுக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆவணத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநர் தரம் தியோ ராய் (Dharam Deo Rai) கூறுகையில், ``மக்களை வனவிலங்கு பாதுகாப்பில் பங்கேற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.