Published:Updated:

தவறவிட்ட தாய் குரங்கு; வாரி அரவணைத்த பழங்குடி பாட்டி! - பந்தலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

பாட்டி

காட்டில் உயிர்கள் அனைத்தும் சமம் என்ற அறத்தை நிலைநாட்டிய ஆதிக்குடிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தவறவிட்ட தாய் குரங்கு; வாரி அரவணைத்த பழங்குடி பாட்டி! - பந்தலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

காட்டில் உயிர்கள் அனைத்தும் சமம் என்ற அறத்தை நிலைநாட்டிய ஆதிக்குடிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Published:Updated:
பாட்டி

அடர் வன வனங்களும் பழங்குடிகளும் நிறைந்த அழகிய மலை கிராமமான கிளன்ராக், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் அமைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் மாலையில் இந்த கிராமத்தின் அருகில் சிங்கவால் குரங்குகளின் பெருங்கூச்சல் காடதிரச் செய்திருக்கிறது. மறுநாள் அதிகாலை வாட்டியெடுக்கும் கடுங்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி சிங்கவால் குரங்கு மட்டும் பரிதாபமாக கீச்சிட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு பழங்குடிகள் பதைபதைத்திருக்கிறார்கள். தாய் குரங்கு மீண்டும் வந்து அந்த குட்டியை மீட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் 2 நாளாக அவ்வப்போது போய் நோட்டம் விட்டு வந்திருக்கிறார் பழங்குடி பாட்டி கல்யாணி.

பாட்டி
பாட்டி

2 நாள்கள் கடந்தும் தாய் குரங்கும் கூட்டமும் வந்த பாடில்லை. வருத்துத்துடன் அந்தக் குட்டியை மீட்டு வாரி அரவணைத்து வந்த பாட்டி, வீட்டில் இருந்த காய் கனிகளை உணவாக கொடுத்து பேரக்குழந்தையைப் போல வளர்த்து வருகிறார். மனித நடமாட்டத்தை தவிர்க்கும் கூச்ச இயல்பைக்கொண்ட சிங்கவால் குரங்கு குட்டி பாட்டியின் அன்பில் வளர்வதைக் கண்டு பழங்குடிகளே பொறாமை கொள்கிறார்கள். அடுத்த சில தினங்களில் அந்தக் குட்டி சிங்கவால் குரங்கைத் தேற்றிய கல்யாணி பாட்டி, மீண்டும் அதன் காட்டிலேயே பிரியா விடை கொடுத்து கூட்டத்துடன் மரமேற்றி விட்டிருக்கிறார். காட்டில் உயிர்கள் அனைத்தும் சமம் என்ற அறத்தை நிலைநாட்டிய ஆதிக்குடிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism