Published:Updated:

காயம்பட்ட பூனைக்குட்டியைக் கவனிக்க மனமில்லை... புளூ கிராஸ் கவனத்துக்கு!

Blue Cross

பணிச் சூழலில் இப்போது, கிரீம்ஸ் ரோட்டிலிருந்து வேளச்சேரிக்கு எங்களால் செல்ல முடியாது என்பதால், `24 மணி நேரமும்' இயங்கும் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினோம்.

காயம்பட்ட பூனைக்குட்டியைக் கவனிக்க மனமில்லை... புளூ கிராஸ் கவனத்துக்கு!

பணிச் சூழலில் இப்போது, கிரீம்ஸ் ரோட்டிலிருந்து வேளச்சேரிக்கு எங்களால் செல்ல முடியாது என்பதால், `24 மணி நேரமும்' இயங்கும் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினோம்.

Published:Updated:
Blue Cross

1959-ம் ஆண்டு, 'கேப்டன்' சுந்தரம் என்பவரால் 'புளூ கிராஸ்' என்ற விலங்குகள் நல அமைப்பு தொடங்கப்பட்டது. 1964-ம் ஆண்டு, முழுமையான பொது நல அமைப்புக்கான அங்கீகாரத்தைப் பெற்றது புளூகிராஸ். பொது இடங்களில் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுப்பதும், விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவற்றைப் பாதுகாப்பாக மீட்பதும்தான் இந்த அமைப்பின் நோக்கம். சென்னையில், வேளச்சேரி செக்போஸ்ட் அருகே இதன் அலுவலகம் அமைந்துள்ளது.

பண்டிகைக் காலங்களில், விலங்குகள் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும். நம் ஊரில் தீபாவளிதான் விலங்குகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் முதன்மையான பண்டிகையாக இருந்துவருகிறது. பட்டாசு சத்தத்தால் விலங்குகள் பயந்து ஓடும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் கருத்தில்கொண்டு, `பாதிக்கப்படும் விலங்குகளை உடனடியாக மீட்க வேண்டும்' என்ற நோக்கத்தில், புளூ கிராஸ் அமைப்பு மற்றும் அல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் சிறப்புக் குழுக்கள், சென்னையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

Blue Cross
Blue Cross
மேலும், அவசர தொலைபேசி எண்கள் சில வழங்கப்பட்டுள்ளன. விலங்குகள் காயமடைந்திருந்தால், 22354959, 22300666 என்ற தொலைபேசி எண்களில் புளூ கிராஸ் அலுவலகத்தையும், விலங்குகள் மீட்பு குறித்து 8939320846 என்ற எண்ணில் அல்மைட்டி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையையும் தொடர்பு கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்று காலை 11.30 மணியளவில், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனை அருகில் பூனைக்குட்டி ஒன்று அடிபட்டு, வலிமையிழந்து, நடக்க முடியாமல் தவித்தது. அதை அப்படியே விட்டுச்செல்ல மனமின்றி, bluecrossofindia.org இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சென்னை புளூ கிராஸ் அலுவலகத்தின் (044-22354959 / 22300666, 22300655, 9962998886) தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ள முயன்றோம்.

மேலே குறிப்பிட்ட எண்களில் ரிங் முழுமையாகப் போனதே தவிர, அழைப்பை யாரும் எடுக்கவில்லை.
பூனைக்குட்டி
பூனைக்குட்டி

புளூகிராஸின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், "பல்வேறு காரணங்களால் புளூ கிராஸ் அலுவலகத்தைத் தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்படலாம். சில எண்கள் வாட்ஸ் அப்பில் மட்டுமே இயங்கும். 'புளூ கிராஸ்' சென்னை காப்பகம் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்-அப் (9962998886) சேவையைப் பயன்படுத்துங்கள். உங்கள் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு, உரிய பதில் கிடைக்கும். ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காரணமாக உடனடியாக வரமுடியாது. ஒவ்வொரு பகுதியாக வரும் அழைப்பை ஏற்றுக் கொண்டுதான் வர முடியும்" என்றார்.

பணிச் சூழலில் இப்போது, கிரீம்ஸ் ரோட்டிலிருந்து வேளச்சேரிக்கு எங்களால் செல்ல முடியாது என்பதால், `24 மணி நேரமும்' இயங்கும் அந்த வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினோம். அதில், பாதிக்கப்பட்ட விலங்கு தற்போது இருக்கும் இடம், அதன் புகைப்படம், வீடியோ, அனுப்புநர் பெயர், முகவரி, தொடர்பு எண், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்புமாறு 'ஆட்டோ ஜெனரேட்டட் மெசேஜ்' ஒன்று வந்தது. ஒன்றுவிடாமல் உடனடியாக அனுப்பினோம். ஆனால், எந்தவித பதிலும் இல்லை. மெசேஜை பார்த்தனரே தவிர, எந்தப் பதிலுமில்லை.

பூனைக்குட்டி
பூனைக்குட்டி

ஒரு மணிநேரம் கழித்து, "பாதிக்கப்பட்ட விலங்கை, நீங்களே புளூ கிராஸ் அலுவலகத்திற்கு எடுத்துவர முடியுமா" என்ற பதில் மட்டுமே வந்தது. "எங்களால் இப்போது இயலவில்லை. தயவுசெய்து நீங்கள் வந்து எடுத்துக்கொண்டு போகவும். பூனை வெகுநேரமாக அவதியுறுகிறது" என்று சொன்னோம். அதன்பிறகும் பழைய கதைதான். மெசேஜ் பார்த்தனர். ஆனால் பதில் இல்லை.

பொது மேலாளர் டான் வில்லியம்ஸை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றோம். இம்முறை, அவர் பிஸியாகிவிட்டார். வாட்ஸ்அப் நோக்கி மீண்டும் ஓடினோம். `ஏதாவதொரு பதிலைச் சொல்லுங்கள். எத்தனை மணிக்கு இங்கு நீங்கள் வருவீர்கள்? பூனையின் நிலைகுறித்து எங்கு அறிந்துகொள்ள முடியும்?' என கேட்டுப்பார்த்தோம். நேரம்தான் ஓடியதே தவிர, பதில் கிடைக்கவில்லை.

பூனைக்குட்டி
பூனைக்குட்டி

அந்த இடத்திலேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை என்பதால், பூனையை அருகிலிருந்த வீட்டின் கேட் ஒன்றின் அருகில் விட்டுவிட்டு மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.

இதே மாதிரி அனுபவம் நண்பர் ஒருவருக்கும் நேர்ந்திருக்கிறது. அம்பத்தூர், திருமலைப்பிரியா நகரில், தென்னை மரத்தில் காகம் ஒன்றின் கால் சிக்கிக்கொண்டு தவித்திருக்கிறது. சிக்கிக்கொண்ட காகத்திற்காக ஏராளமான காகங்கள் அந்தப் பகுதியில் குழுமி, கத்திக்கொண்டிருந்தன. உடனடியாக 8939473374 என்ற எண்ணில் புளூ கிராஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார் நண்பர். மிகவும் பொறுப்பாக அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட அலுவலர், புகைப்படம் அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார். உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார்கள். லொக்கேஷன் கேட்க, அதையும் அனுப்பியுள்ளார்கள். வருவார்கள் வருவார்கள் என்று காத்திருக்க, மாலை வரை யாரும் வரவில்லை.

திரும்பவும் போன் செய்தபோது, அதேநபர் திரும்பவும் புகைப்படம், லொக்கேஷன் கேட்டுள்ளார். காகம் இறக்கும் தருவாயில் உள்ளது என்று அதே வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியும் பயனில்லை. மறுநாள் அந்த எண்ணுக்கு அழைத்தபோது, மீண்டும் புகைப்படம், லொக்கேஷன் என்று ஆரம்பித்திருக்கிறார் அங்கிருந்த ஊழியர். மறுநாள் மாலை காகம் இறந்தேவிட்டது.

இறந்த காகம்
இறந்த காகம்

இந்தியாவில், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை புளூ கிராஸுக்கு இப்படி 16,856 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட இந்தத் தரவுகளை இப்போது யோசித்துப்பார்த்தால், பயம் மட்டுமே மிஞ்சுகிறது.

`எத்தனை விலங்குகளுக்கு முறையான சிகிச்சைகள் கிடைத்திருக்கும்?' என்ற கேள்வியை மட்டும் எவ்வளவோ முயன்றும் கடக்கவே முடியவில்லை. இந்த குட்டிப்பூனையைப் போல எத்தனை விலங்குகள் நடு வீதியில் கேட்பாரற்றுக் கிடந்து சித்ரவதையை அனுபவத்திருக்கும் என்ற அதிர்ச்சியை யோசித்தாலே மனம் நடுங்குகிறது.